ரஜினியை போட்டாலே பயங்கர பிளாப் தான்!! அன்றே கணித்த பாரதிராஜா!!

0
227
It's a terrible flop if Rajini is cast!! Bharathiraja predicted that day!!
It's a terrible flop if Rajini is cast!! Bharathiraja predicted that day!!

ரஜினியை போட்டாலே பயங்கர பிளாப் தான்!! அன்றே கணித்த பாரதிராஜா!!

இயக்குனர் இமயம் எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள் தமிழ் திரைப்பட துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர், மற்றும் நடிகர், என பல முகங்களைக் கொண்டவராவார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி,என மூன்று மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவர் பல நடிகை, நடிகர்களுக்கும்பட வாய்ப்புகள் கொடுத்து வளர்த்து விட்டவர்.இவர் இயக்கிய திரைப்படப்புகளில் “முத்திரைகள் “எனும் திரைப்படத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் ஆறு முறை தேசிய விருதுகள் மூன்று முறை தமிழ்நாடு மாநில விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருது, மற்றும் கலைமாமணி விருது என பல விருதுகளை பெற்றவர் இவர்.அவருடைய முதல் திரைப்படமான “பதினாறு வயதினிலே” திரைப்படத்தில் அறிமுகமாகிய கமல் மற்றும் ரஜினி அவர்கள் தற்போது வரை நல்ல மார்க்கெட்டில் உள்ளனர்.

பாரதிராஜா அவர்கள் இயக்கிய இந்த படத்தில் நடிகர் கமல் சப்பணியாகவும் ,நடிகர் ரஜினி அவர்கள் பரட்டையாகவும் நடித்து அசத்தினர்.இப்பட வெற்றிக்குப் பிறகு  அவர் கமலை வைத்து இயக்கிய படம் தான் சிகப்பு ரோஜாக்கள்,டிக் டிக் டிக், ஒரு கைதியின் டைரி ஆகும்.கமலை வைத்து இயக்கிய படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பையும், வசூல் சாதனையும், இவருக்கு  பெற்றுக் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து இயக்கிய படம் தான் “கொடி பறக்குது” இந்தத் திரைப்படமானது எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை என்பதால்,  பாரதிராஜா அவர்கள் அப்படத்தோடு நடிகர் ரஜினி அவருக்கு பட வாய்ப்புகளை கொடுக்க தவறிவிட்டார்.நடிகர் கமலுக்கு மட்டும் நான்கு பட வாய்ப்புகளை கொடுத்த இவர் ரஜினி அவர்களுக்கு அடுத்தடுத்த படத்திற்கான வாய்ப்புகளை கொடுக்காமல் போனது கிசுகிசுப்பை ஏற்படுத்தியது.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் படத்தோல்விக்கு பிறகும், வேறு இயக்குனர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை தந்து, பல்வேறு விருதுகளையும் வாங்கி, சூப்பர் ஸ்டார்  என்னும் பட்டத்தை பெற்றார்.இதனால் புகழ் பெற்ற இயக்குனர்களின்  படத்தில்  வாய்ப்பு கிடைக்காமல்,தனக்கு  கிடைத்த படங்களை சாதகமாக்கி,சிறப்பாக நடித்து,அவரது தனித்துவத்தை  நிலை நாட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Previous articleபுதிய மாற்றங்களுடன் அறிமுகமாகும் ராயல் என்பீல்ட் 350!!! விற்பனை செப்டம்பர் 3ம் தேதி தொடக்கம் !!
Next articleதலையில் பேன் தொல்லை அதிகமாக உள்ளதா!!! அதை சரி செய்ய சில எளிமையான டிப்ஸ் இதோ!!!