துப்புரவு பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! இனி சூப்பரான வாழ்க்கை தான்!!

0
85
JACKPOT HIT FOR CLEANERS!! It's a great life now!!
JACKPOT HIT FOR CLEANERS!! It's a great life now!!

துப்புரவு பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! இனி சூப்பரான வாழ்க்கை தான்!!

கேரளாவில் அரசு சார்பாக லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டு வருகிறது. பம்பர் பரிசு விற்பனையும் பண்டிகை நாட்களில் நடைபெற்று வருகிறது. இங்கு விற்கப்படும் இந்த லாட்டரி சீட்டுகளை வாங்குவதற்கு தமிழகத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் திரண்டு செல்கின்றனர்.

இதனையடுத்து கடந்த 2023  ஆம் ஆண்டிற்கான மான்சூன் பம்பர் பரிசு ரூபாய் பத்து கோடி என்று அறிவிப்பு வெளியானது. எனவே, மொத்தம் 27  லட்சம் டிக்கெட்கள் அச்சிடப்பட்டது.

ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 250  என்றும் கூறப்பட்டது. எனவே, இந்த பம்பர் சீட்டு குலுக்கலில் ரூபாய் பத்து கோடி விழுந்தது. இந்த அதிர்ஷ்டம் யாருக்கு அடித்தது என்று அனைவரும் எதிர்ப்பார்த்தனர்.

பதினொரு பெண் துப்புரவு பணியாளர்கள் தான் இதை வாங்கி உள்ளார்கள் என்று பிறகு தெரிய வந்தது. பதினொரு பேர் சேர்ந்து 250 ரூபாய் கொடுத்து லாட்டரி சீட்டை வாங்கி உள்ளனர்.

எனவே, இந்த லாட்டரி சீட்டில் பத்து கோடி ரூபாயை வென்று இவர்களின் வாழ்க்கையே மாறி விட்டது. இவர்கள் இனி மகிழ்ச்சியாக சூப்பராக வாழ போகிறார்கள் என்று அனைவரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

ஒரே நொடியில் இவர்களே நினைத்து பார்க்காத அளவிற்கு லாட்டரியில் பத்து கோடி விழுந்து இவர்கள் வாழ்க்கை மாறியது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் இந்த துப்புரவு பணியாளர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
CineDesk