புத்தாண்டை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி! அரசு வெளியிட்ட தகவல்!
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியானது நடத்த கூடாது என பீட்டா போன்ற அமைப்புகள் மூலம் நீதிமனற்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பீட்டா அமைப்பினர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி மாடுகளை துன்புறுத்தப்படுகின்றனர் என வாதாடினார்கள் அப்போது ஜல்லிக்கட்டு போட்டி இனி நடக்காது என உத்தரவிட்டனர்.
அந்த உத்தரவை அடுத்து போராட்டம் தொடங்கியது.மேலும் மாணவர்கள் சென்னை மெரினாவில் மாபெரும் புரட்சி நடத்தினார்கள்.அந்த புரட்சியை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறும் என உத்தரவு பிறபிக்கபட்டது.
அதனை தொடர்ந்து ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகின்றது.இந்த ஆண்டும் பீட்டா அமைப்பினர் வழக்கு தொடுத்தனர்.இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி வரை இந்த வழக்கு நிலுவையில் தான் இருந்தது.அதனால் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா இல்லையா என அனைவரும் எண்ணி கொண்டிருந்த நிலையில் கால்நடைத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிவிப்பில் ஜல்லிக்கட்டு போட்டி திட்டமிட்டது போல் கட்டாயமாக நடைபெறும் எனவும் ஜனவரி 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும் அதற்கு அடுத்து 15 தேதி பாலமேடு பகுதிகளிலும், ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் கட்டாயம் ஜல்லிக்கட்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது.இந்நிலையில் தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பீட்டா உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகள் தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
மேலும் தமிழகத்தில் புத்தாண்டில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 2ஆம் தேதி புதுக்கோட்டையில் நடக்க உள்ளது.கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் அடைக்கல அன்னை தேவலாய விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.