#BigBreakung | நான் மிரட்டினேனா? என்மீதே சந்தேகமா? ஜெயக்குமாரின் மர்ம மரணம் – எம்எல்ஏ பரபரப்பு பேட்டி!

Photo of author

By Vijay

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெயக்குமார் தனசிங் காணவில்லை என்று, அவரின் மகன் காவல் துறையில் புகாரளித்திருந்த நிலையில், இன்று காலை அவர் சடலமாக மீட்டப்பட்டுள்ளது பெரும் தெறிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்த நிலையில், கடந்த 2ம் தேதி மாயமானார்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை! பின்னணியில் நாங்குநேரி எம்எல்ஏ?!
nellai jayakumar

இன்று காலை உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் தனசிங் பாதி எறிந்த நிலையில் சடலமாக மீட்டக்கப்பட்டுள்ளார்.

கடந்த 30ஆம் தேதி ஜெயக்குமார் தனது கைப்பட எழுதிய கடிதத்தில், திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், எம்.எல்.ஏ ரூபி மனோகரன் சற்று முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், ஜெயக்குமாரின் மரணம் மிகவும் வருத்தத்துக்குரியது. கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் நாங்கள் இருவரும் ஒன்றாக தேர்தல் பணி செய்தோம். என்னுடைய உற்ற நண்பர் அவர் என்றார்.

#BigBreakung | நான் மிரட்டினேனா? என்மீதே சந்தேகமா? ஜெயக்குமாரின் மர்ம மரணம் - எம்எல்ஏ பரபரப்பு பேட்டி!
RROBI MANOGARAN

அப்போது செய்தியாளர்கள் உயிரிழந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக நீங்கள் அவரை மிரட்டல் விடுத்ததாகவும், அவரின் உயிருக்கு உங்களலால் பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த ரூபி மனோகரன், இதில் உண்மை இல்லை என்று தான் நான் கூறுவேன். நம்முடைய தமிழக போலீசார் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். இந்த விவகாரத்தில் உண்மையை கண்டுபிடிப்பார்கள். காவல்துறையின் அனைத்து விசாரணைக்கும் நான் முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன்.

என்மீது எந்த தவறும் இதில் இல்லை. நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள், என் மீது வேண்டுமென்றே பழி போடும் நோக்கில் பின்னணியில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை என்னால் உணர முடிகிறது. எங்கள் இருவருக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது/ நாங்கள் சகோதரர்கள் போல. நண்பர்கள் போல பயணித்து வந்தோம் என்றார்.

இதற்கிடையே, நெல்லை கிழக்கு மாவட்ட காங்.கமிட்டி தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் உடல் அவரது தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.