23 வயதில் நீதிபதி! பழங்குடியின பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

23 வயதில் நீதிபதி!
பழங்குடியின பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ள ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது பீட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது: “திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி. இவர் தனது 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெரிய வசதிகள் இல்லாத மலை கிராமத்தில் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டி இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது திராவிட மாடல் அரசு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை என கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். எனது வெற்றிக்கு உறுதுணையாக நின்று அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுக்கள்!

சமூக நீதி என்ற சொல்லை உச்சரிக்க கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றி தான் தமிழ்நாடு தரும் பதில்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.