வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க இந்த பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்!!

Photo of author

By Divya

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க இந்த பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்!!

வெள்ளரி பழம் கோடை காலத்தில் அதிகளவு விற்பனை செய்யக் கூடிய ஒன்று.இந்த பழத்தில் அதிகளவு நீர்ச்சத்து,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தருகிறது.

கோடை காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருவதால் உடல் அதிகளவு சூடாகிறது.இந்த சூட்டை தணிக்க வெயிலில் இருந்து உடலை காத்துக் கொள்ள வெள்ளரி பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வருவது நல்லது.வெள்ளரி பழத்தில் வைட்டமின்கள்,நீர்ச்சத்து,ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

வெள்ளரி பழம் ஆப்பிள் பழத்தின் ருசியை ஒத்திருக்கும்.இதில் சர்க்கரை வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.வெள்ளரி பழம் சீசன் இருக்கும் போது தவறாமல் வாங்கி சாப்பிடவும்.வெள்ளரி பழம் சரும பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளரி பழம்
2)அஸ்கா சர்க்கரை
3)ஐஸ்கட்டி

செய்முறை:-

ஒரு வெள்ளரி பழத்தை இரண்டாக நறுக்கி அதன் விதையை அப்புறப்படுத்தி விடவும்.பிறகு அதனுள் இருக்கும் சதை பற்றை மட்டும் எடுத்து மிக்ஸி ஜாரில் போடவும்.பிறகு அதில் ஐஸ்கட்டி மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு சுத்து விடவும்.இதனை தொடர்ந்து சுவைக்காக வெள்ளை சர்க்கரை சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.இதை கிளாஸிற்கு ஊற்றி குடித்தால் உடல் சூடு முழுமையாக தணிந்து விடும்.