கருப்பு உதட்டை பிங்க் நிறத்தில் மாற்ற வெறும் 3 பொருட்கள் போதும்!!!

0
117

கருப்பு உதட்டை பிங்க் நிறத்தில் மாற்ற வெறும் 3 பொருட்கள் போதும்!!

 

பெண்கள் தங்களை அழகாக வைத்துக்கொள்ள ஆசைபடுவது அறிந்த ஒன்று தான்.முக்கியமாக உதடுகள் நல்ல பிங்க் நிறமாக வேண்டும் என்பதற்காக பெரும்பாலான பெண்கள் இரசாயான முறையில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி அறியாதோர் ஏராளம் என்று சொல்லலாம்.

மேலும் இரசாயன பொருட்களை பயன்படுத்தி பிங்க் நிறத்திற்கு மாறும் உதட்டை இயற்கை முறையிலும் நல்ல நிறத்திற்கு மாற்ற முடியும் என்பது பலரும் அறியாத ஒன்று.இந்நிலையில் வெறும் 3 பொருட்களை பயன்படுத்தி இயற்கை முறையில் உதடுகளை மிருதுவான பிங்க் நிறத்திற்கு எளிதாக மாற்ற முடியும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் உதடுகளில் நல்ல மாற்றம் காண முடியும்.

 

தேவையான பொருட்கள்:-

 

சர்க்கரை – 1 தேக்கரண்டி

 

தேங்காய் எண்ணெய் -1 தேக்கரண்டி

(அ )

வாசலின்

 

எலுமிச்சை சாறு – 1தேக்கரண்டி

 

செய்முறை:-

 

முதலில் சுத்தமான கிண்ணம் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை,1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது வாசலின் மற்றும் அரை எலுமிச்சை பழ சாறு ஆகிய மூன்றையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.பிறகு உதட்டின் மேல் நன்றாக ஸ்க்ரப் செய்தல் வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் உதடுகளின் மேல் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி அவை மிருதுவாக மாறும்.மேலும் எலுமிச்சை சாறு உதட்டில் இருக்கும் கருமையை நீக்க உதவும்.இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் இயற்கை முறையில் உதடுகளை நல்ல நிறத்திற்கு மாற்ற முடியும்.

Previous articleசின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு! உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தந்தை அதிரடி
Next articleஅல்சர் முதல் மலச்சிக்கல் வரை அனைத்து வித நோய்க்கும் இந்த 1 பானம் போதும்!!