தினமும் 5 சொட்டு இரவில் தடவினால் போதும்!! பிரசவ தழும்பு வரிகள் மறைந்து விடும்!!

0
35

தினமும் 5 சொட்டு இரவில் தடவினால் போதும்!! பிரசவ தழும்பு வரிகள் மறைந்து விடும்!!

பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் இந்த தழும்புகள் வரும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும்.

சருமத்தில் கொலஜன், எலாஸ்டின் என்ற புரதங்கள் உள்ளன. இவைதான் சருமத்தைப் பாதுகாக்கின்றன.
வயிறு விரிவடைந்து மீண்டும் சுருங்கும்போது, டெர்மிஸ் (Dermis) படிமம் உடைக்கப்படுவதால், ஸ்ட்ரெச் மார்க் விழுகிறது.

அதேபோல், நீண்ட காலமாக உடல் எடை அதிகம் இருந்து, திடீரென எடை குறையும்போது சருமத்தில் உள்ள டெர்மிஸ் படிமம், எலாஸ்டின், கொலஜன் போன்றவை உடைக்கப்படுவதால் தழும்பாக மாறுகின்றன. இதற்கான வீடு செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:
ஆமணக்கு எண்ணெய்
தேங்காய் எண்ணெய்
கற்றாழை ஜெல்
விட்டமின் E ஆயில் கேப்சூல்

செய்முறை:
1: முதலில் ஒரு பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
2: பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ளவும்.
3: பிறகு விட்டமின் E ஆயில் கேப்சூல் ஒன்றை சேர்த்துக் கொள்ளவும்.
4: இவை அனைத்தும் சேர்த்த பிறகு நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
பிறகு அதனை ஒரு கண்ணாடி பாட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.இதை நம் வயிற்றில் உள்ள தழும்புகளில் தடவிக் கொண்டால் போதும்.

இதனை தினமும் இரண்டு முறை பயன்படுத்திக் கொள்ளலாம். காலை குளிப்பதற்கு முன்பும் இரவு தூங்கும் முன்பும் இதனை பயன்படுத்தலாம்.
இதில் பயன்படுத்திருக்கும் ஆமணக்கு எண்ணெய் நம் தோலில் உள்ள சுருக்கத்தையும் அந்த தழும்புகளையும் மற்றும் தோலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி இருப்பதனால் தோல் சுருக்கம் நீங்கிவிடும் மற்றும் தோலில் உள்ள கருமையும் நீங்கிவிடும்.இந்த கிரீம்மை வயிற்றில் தடவுவதனால் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனெனில் இதில் பயன்படுத்திருக்கும் அனைத்து பொருளும் இயற்கையானவே.

மற்றும் இதை பயன்படுத்தினால் நம் வயிற்றில் உள்ள சூட்டையும் குறைக்கும் குளிர்ச்சியைத் தரும்.இதை 15 முதல் 20 நாட்கள் வரை பயன்படுத்தினால் நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்கும்.

author avatar
Parthipan K