முகத்திற்கு சோப்பே இல்லாமல் நிரந்தரமாக வெள்ளையாக இதை தடவினால் போதும்!!

0
290

முகத்திற்கு சோப்பே இல்லாமல் நிரந்தரமாக வெள்ளையாக இதை தடவினால் போதும்!!

நம்மில் பல பேருக்கு முகம் பொலிவிழந்து எப்போதும் கருப்பாக காணப்படும். இதற்கு கடைகளில் விற்கக்கூடிய பல ரூபாய் கோடி பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் வெள்ளையாக முகம் ஜொலிக்காது. எனவே இதற்காக இயற்கையான முறையில் நிரந்தரமாக வெள்ளையாவதற்கு ஒரு டிப்ஸை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கற்றாழை
சர்க்கரை
எலுமிச்சை
அரிசி மாவு

செய்முறை:
இதற்கு நாம் முதலில் பயன்படுத்த போவது கற்றாழை. இதை செய்வதற்காக இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி அளவு இயற்கையான கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளவும். இயற்கையான கற்றாழை கிடைக்கவில்லை எனில் கடைகளில் இருக்கக்கூடிய கற்றாழை ஜெல்லையும் வாங்கி பயன்படுத்தலாம்.

இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதனுடன் அரை தேக்கரண்டி அளவு எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கொள்ளவும். மேலும் இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு அரிசி மாவையும் சேர்த்துக் கொள்ளவும். இப்போது இது அனைத்தையும் நன்கு கலந்து ஒரு பேஸ்ட் ஆக செய்து கொள்ளவும்.

இப்போது நம்முடைய பேஸ்ட் தயாராகி விட்டது.இதனை முகத்திற்கு அப்ளை செய்யும் முன் முகத்தை நன்கு தண்ணீரால் கழுவிக்கொள்ளவும். பிறகு இந்த பேஸ்ட்டை முகம் கை கால் கழுத்து என கருமையாக இருக்கும் எந்த இடங்களில் வேண்டுமானாலும் தேய்க்கலாம். இதை தேய்த்த 5 நிமிடங்களுக்கு சர்குலர் மோஷனில் முகத்தை நன்கு மசாஜ் செய்து விடவும். இதன்பிறகு இதை 10 லிருந்து 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும்.

இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தாலே நம் முகம் மிகவும் பொலிவுடன் வெள்ளையாக அழகாக காணப்படும். இவ்வாறு செய்வதால் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் கரும்புள்ளிகள் கருந்துட்டுக்கள் சன் டான் பருக்கள் என அனைத்தும் மறைந்து முகம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக மாறும்.

இதில் பயன்படுத்தி இருக்கக்கூடிய கற்றாழை சர்க்கரை எலுமிச்சை மற்றும் அரிசி மாவு என அனைத்துமே நம் முகத்தில் இருக்கக்கூடிய கருமையை நீக்கி வெள்ளையாக்குவதற்கு மிகவும் பயன்படும் ஒன்றாகும். அதுமட்டுமில்லாமல் நம் முகத்திற்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்து பார்ப்பதற்கு வெள்ளையாக அழகாக வைத்திருக்கும்.

மேலும் இதில் சேர்த்து இருக்கக்கூடிய கற்றாழை நம் முகத்தில் உள்ள வறட்சியை நீக்கி புத்துணர்ச்சி கொடுத்த முகத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் அழகாக காட்டும்.

author avatar
CineDesk