இதை மட்டும் செய்யுங்க.. ஒரே வாரத்தில் 10 கிலோ எடை கடகடன்னு குறைஞ்சிடும்!! அனுபவ உண்மை!!

Photo of author

By Divya

இதை மட்டும் செய்யுங்க.. ஒரே வாரத்தில் 10 கிலோ எடை கடகடன்னு குறைஞ்சிடும்!! அனுபவ உண்மை!!

இன்றைய நவீன காலத்தில் ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கத்தால் உடல் எடை எளிதில் கூடி விடுகிறது.இதனால் பல்வேறு நோய் பாதிப்புகள் எளிதில் நம்மை பாதித்து விடும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம்.

இந்த உடல் எடையை விரைவில் குறைக்க கொள்ளு பருப்பு மற்றும் பூண்டு பற்களை பயன்படுத்தினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.கொள்ளு பருப்பில் புரதச்சத்து,நார்ச்சத்து, தசைசத்து,கார்போஹைட்ரெட்,இரும்புச்சத்து,பாஸ்பரஸ்,பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் அடங்கி இருக்கிறது.

அதேபோல் பூண்டு பற்களில் வைட்டமின் பி6,கால்சியம்,காப்பர்,மெக்னிசியம்,வைட்டமின் சி,அலிசின்,அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட்,சிஸ்டீன் சல்ஃபாக்சைடு உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

தேவையான பொருட்கள்:-

கொள்ளு பருப்பு – 200 கிராம்

பூண்டு – 150 கிராம்

செய்முறை:-

அடுப்பில் கடாய் வைத்து 200 கிராம் கொள்ளு பருப்பு சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.

அடுத்து 150 கிராம் அளவு பூண்டு எடுத்து அதன் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.இந்த நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை வறுபட்டு கொண்டிருக்கும் கொள்ளு பருப்பில் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

வறுபட்ட இந்த 2 பொருட்களையும் நன்கு ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பிறகு தயார் செய்து வைத்துள்ள கொள்ளு + பூண்டு பொடியை 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தோம் என்றால் உடலில் படித்து கிடக்கும் கெட்ட கொழுப்புகள் நீங்கி உடல் எடை மலமலவென குறையத் தொடங்கும்.