தீராத இடுப்பு வலி பிரச்சனை நிமிடத்தில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!

Photo of author

By Divya

தீராத இடுப்பு வலி பிரச்சனை நிமிடத்தில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!

தற்காலத்தில் பெரும்பாலானோர் இடுப்பு வலியால் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு, வேலைப்பளு, இடுப்பில் காயம், வயது முதிர்வு, இடுப்பு எலும்பில் அடிபடுதல் உள்ளிட்டவைகள் பொதுவான காரணங்களாக சொல்லப்படுகிறது.

இடுப்பு வலி ஏற்பட்டு விட்டால் சிறு வேலை கூட செய்ய கடினமாக இருக்கும். இந்த வலி பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.

இதற்கு ஓமம், கற்பூரம், தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவற்றை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு ஒத்தடம் கொடுத்தால் விரைவில் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*ஓமம்

*தேங்காய் எண்ணெய்

*கற்பூரம்

செய்முறை..,

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 தேக்கரண்டி ஓமத்தை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அதில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் 1 துண்டு கற்பூரத்தை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பிறகு இதில் ஒரு காட்டன் துணையை நினைத்து பிழிந்து இடுப்பில் வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இடுப்பு வலி முழுமையாக குணமாகும்.