உங்கள் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி பண வரவு அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

உங்கள் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி பண வரவு அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

Divya

உங்கள் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி பண வரவு அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

இன்றைய காலகட்டத்தில் பணத் தேவை இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. இன்றைய காலத்தில் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டு சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.

சம்பாதிக்கும் பணம் தான் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது என்றால் சேமிக்கும் கொஞ்ச நஞ்ச பணமும் அதேபோல் செலவாகி விடுகிறது என்ற ஆதங்கமும், வருத்தமும் நம்மில் பலருக்கும் இருக்கிறது. பணம் கையில் தங்காமல் செலவாகி விடுவதால் அவசரத் தேவைக்காக வெளியில் கடன் வாங்கும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம். இதனால் பணப் பிரச்சனை விடாமல் நம்மை துரத்தத் தொடங்குகிறது.

இதனால் கடனில் சிக்காமல் பணப் பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும், அதன் வரவு அதிகரிக்கவும் சில ஆன்மீக வழிகளை நாம் கடைபிடிப்பது மிகவும் அவசியம்.

தேவையான பொருட்கள்:-

*குங்குமப் பூ

*அகல் விளக்கு அல்லது காமாட்சி விளக்கு

*திரி

*தீப எண்ணெய்

விளக்கேற்றும் முறை…

தினமும் உங்கள் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றும் பொழுது அதில் 5 என்ற எண்ணக்கையில் குங்குமப் பூ சேர்த்து விளக்கேற்றவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கிவிடும்.அதேபோல் போல் தீராத பணப் பிரச்சனை நீங்கி பண வரவு அதிகரிக்கும்.