100 வருஷம் நோயின்றி வாழ இந்த 10 அற்புத வழிகளை பாலோ பண்ணுங்க போதும்!!

0
73
#image_title

100 வருஷம் நோயின்றி வாழ இந்த 10 அற்புத வழிகளை பாலோ பண்ணுங்க போதும்!!

நம் முன்னோர்கள் நோயின்றி நீண்ட வருடங்கள் வாழ காரணம் அவர்கள் கடைபிடித்த இயற்கை வழி வாழ்க்கை முறைகள் தான்.சுத்தமான தண்ணீர், நிலம், காற்று என்று அனைத்தும் வாழ்நாளை நீடிக்கும் வழிகளாக அவர்களுக்கு இருந்தது. இப்பொழுது தான் உடல்நலம் சரி இல்லையென்றால் மருத்துவமனையை நாடுகிறோம். ஆனால் மாத்திரை, மருந்து இல்லாத அந்த காலத்தில் மனிதர்கள் மட்டும் எப்படி பல வருடங்கள் நோயின்றி வாழ்ந்தார்கள்.அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழக்காரணம் தான் என்ன? அவர்களை எந்த வித நோயும் பாதிக்கவே இல்லையா? என்ற பல கேள்விகள் நம்மில் பலருக்கு எழும்.அவர்களும் மனிதர்கள் தானே.அவர்களை மட்டும் எதுவும் பாதிக்க வில்லையா? என்றால் அந்த காலத்திலும் பல்வேறு நோய்கள் உருவாகியது.இதனால் பலர் பாதிக்கப்பட்டனர்.

ஆனால் இன்றைய சூழலை ஒப்பிடும் பொழுது அப்பொழுது ஏற்பட்ட நோய் பாதிப்புகள் அவர்களை அந்தளவிற்கு பாதிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.காரணம் அவர்களின் வாழக்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள்.இயற்கையாவே அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருந்ததால் கொடிய நோயையும் தாங்கும் ஆற்றலை அவர்கள் கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. முன்பெல்லாம் ஹோட்டலில் சாப்பிடுவது என்பது அரிதாக இருந்தது.ஆனால் நவீன உலகில் வீட்டில் சமைத்து சாப்பிடும் பழக்கம் குறைந்து வருகிறது.

விலைவாசி உயர்வு காரணமாக ஆண்,பெண் இருவரும் வேலைக்கு போனால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற சூழல் தற்பொழுது ஏற்பட்டு இருக்கிறது.இதனால் சமைக்க நேரம் கூட இல்லாமல் இயந்திர வாழ்க்கையை எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதேபோல் உழைப்பு ஏற்ற ஊதியம் கிடைக்காத என்றால் அதுவும் கேள்விக்குறி தான். நாம் சம்பாதிப்பது எதற்கு நல்ல வாழக்கையை வாழ வேண்டும் என்பதற்கு தான். ஆனால் நாம் நினைத்தபடியான வாழ்க்கையையா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? பணத்தின் தேவை அதிகரித்து விட்டதால் அதை நோக்கி செல்ல தொடங்கிய நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை கெடுத்து கொண்டிருக்கிறோம் என்று பலரும் உணர்வதில்லை.முறையற்ற தூக்கம்,முறையற்ற உணவுமுறை என்று பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு எளிதிலில் அபெக்ட்டாகி விடுகிறோம்.சொல்லப்போனால் பிராய்லர் கோழி மாதிரி தான் தற்பொழுது மனித உடல் அமைப்பு இருக்கிறது. இளம் வயது மாரடைப்பு, எளிதிலில் காய்ச்சல் பாதிப்பு என்று வித பிரச்சனைகளும் நம்மை தொத்தி கொள்கிறது.இதில் இருந்து விடுபட சில வழிகளை கடைபிடித்தால் எளிதில் ஏற்படும் நோய் பாதிப்பில் இருந்து தப்பித்து விடலாம்.

உடல் ஆரோக்கியமாக இருக்க செய்ய வேண்டிய 10 வழிகள்:-

*ஒரு மனிதனுக்கு 8 முதல் 10 மணி நேர தூக்கம் என்பது அவசியாமான ஒன்று.அதுவும் இரவு 8 மணிக்கு உறங்க தொடங்கி காலை 5 மணிக்கு எழுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

*தினமும் சுத்தமான தண்ணீர் 5 லிட்டர் பருகுவது அவசியம். இதனால் உடலில் தேங்கி கிடைக்கும் அழுக்குகள் சிறுநீர் வழியாக வெளியேற்றப்பட்டு விடும்.இதன் காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

*முறையான உடற்பயிற்சி அல்லது தியானம் செய்வது உடலையும்,மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.அதோடு காலையில் அடிக்கும் சூரிய ஒளி நம் உடலில் பட அந்த நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

*அனைவரின் வீட்டிலும் 1 மரமாவது வளர்க்க வேண்டும்.ஏன்னென்றால் மரங்கள் அசுத்தமான காற்றை சுத்தப்படுத்தி நமக்கு வழங்கும் திறனை கொண்டிருக்கிறது.

*முடிந்தளவு காய்கறிகள் மற்றும் பழ மரங்களை வீட்டில் வளர்க்க முயற்சி செய்யுங்கள்.காரணம் நாம் காசு கொடுத்து வாங்கி உண்பது காய்கறி,பழங்கள் அல்ல வியாதியை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

*டீ மற்றும் காபியை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.அதற்கு பதில் மூலிகை தேநீர் செய்து பருகலாம்.அதில் வெள்ளை சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்து விட்டு இயறகை முறையில் கிடைக்கும் பனை வெல்லத்தை சேர்க்கலாம்.

*அதிகம் கோபப்படுவது, தேவையற்ற விஷயங்களை அதிகம் யோசிப்பது,அடுத்தவர்கள் வாழ்க்கையில் தேவை இல்லாமல் தலையிடுவது,பொறாமை கொள்வது போன்ற விஷயங்களை தவிர்ப்பதால் மன ஆரோக்கியம் காப்பாற்றப்படும்.

*ஹோட்டல் உணவு,அதேபோல் ஹோட்டல் ஸ்டைலில் செய்யப்படும் வீட்டு உணவுகளை தவிர்ப்பது நல்லது.நம் பாரம்பரிய உணவு முறையை கடைபிடிக்க பழகிக்கொள்ளுங்கள்.

*ரசாயனம் நிறைந்த பொருட்களை உடம்பிற்கு பயன்படுத்துவதையும், உண்பதையும் அறவே தவிருங்கள்.

*ஆரோக்கியமான உணவு என்றாலும் அளவாக எடுத்து கொள்ளவது மிகவும் நல்லது.அசைவ உணவில் அதிக சத்துக்கள் இருந்தாலும் அவற்றை அடிக்கடி எடுப்பதை தவிர்க்கவும்.குறிப்பாக பிராய்லர் கோழிஜே மாமிசத்தை உண்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.