ஒல்லியாக இருக்கும் குழந்தை கொளுகொளுன்னு மாற இதை மட்டும் கொடுங்கள்!!

Photo of author

By Rupa

ஒல்லியாக இருக்கும் குழந்தை கொளுகொளுன்னு மாற இதை மட்டும் கொடுங்கள்!!

குழந்தைகள் ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டால் சரியாக சாப்பிடாமல் அளந்துடிப்பர் இதனால் அவர்களது உடலானது மெலிந்து காணப்படும். மேற்கொண்டு குழந்தைகளின் உடலை தேற்றுவது என்பது முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. ஆனால் இந்த பதிவில் வரும் உணவை கொடுத்தால் எப்படிப்பட்ட ஒல்லியாக இருக்கும் குழந்தைகளும் உண்டாக மாறிவிடுவார்கள்.குறிப்பாக இதனை ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் கொடுக்கலாம்.

ரெசிபி: 1

பொட்டுக்கடலையை இரண்டு ஸ்பூன் அளவிற்கு எடுத்து வறுத்துக் கொள்ள வேண்டும். இதேபோல நிலக்கடலையும் இரண்டு ஸ்பூன் அளவிற்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். முந்திரி,பாதாம்,கருப்பு திராட்சை மற்றும் இரண்டு ஸ்பூன் அரிசி ஆகியவற்றையும் வறுத்துக் கொள்ள வேண்டும்.

இது அனைத்தையும் நன்றாக ஆறவைத்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை குழந்தைகளுக்கு கஞ்சி போல் செய்து கொடுக்கலாம். இரண்டு ஸ்பூன் அளவிற்கு அரைத்த பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்பு இதனை நன்றாக சூடு செய்த சாப்பிடும் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். இதனை தொடர்ந்து கொடுத்து வர குழந்தைகள் நன்றாக உடல் எடை கூடுவர்.

ரெசிபி:2

முளைக்கட்டிய ராகி

சம்பா கோதுமை

முந்திரி

பாதாம்

பாசிப்பயறு

இவை அனைத்தும் இரண்டு ஸ்பூன் என்ற அளவில் எடுத்து வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் பவுடரையும் தண்ணீரில் கலந்து கஞ்சி போல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதனை குடுத்தால் விரும்பி சாப்பிடுவர்.