கோடை காலத்தில் வரும் அக்கியை வீட்டு வைத்திய முறையில் எளிமையாக சரி செய்வது எப்படி!!

0
135
How to cure acne in summer with simple home remedies!!
How to cure acne in summer with simple home remedies!!

கோடை காலத்தில் வரும் அக்கியை வீட்டு வைத்திய முறையில் எளிமையாக சரி செய்வது எப்படி!!

நமது உடலில் அதிகப்படியான அழுக்குகள் சேரும் பட்சத்தில் அது அக்கியாக மாறி விடுகிறது.இதனால் நமது உடல் முழுவதும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சிறிய கொப்பளங்களாக பரவி வருகிறது.இது வந்துவிட்டால் நமது உடலிலும் அரிப்பு தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கும்.அதுமட்டுமின்றி சிறுவயதில் யாருக்காவது அம்மை போட்டு இருந்தால் அதன் தொற்றானது முழுமையாக சரியாகாமல் நமது உடலில் அப்படியே தேங்கிவிடும்.அதன் வெளிப்பாடு தான் நாளடைவில் அக்கியாக மாறி விடுகிறது.

அக்கியை நாம் சில வீட்டு வைத்திய முறைகளிலேயே சரி செய்யலாம். கிராமப்புறங்களில் அக்கி நோய் வந்து விட்டால் அங்குள்ள பெரியவர்களிடம் சென்று செம்மண்ணை பூசி வருவர்.செம்மண்ணை எடுத்து அதில் சிறிதளவு இளநீர் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி அக்கி உள்ள இடத்தில் தடவி விடுவர். கிராமப்புறங்களில் இதனை பெயர் சொல்லாதது எழுதுவது என்றும் கூறுவர்.

இவ்வாறு செய்து வந்தால் அக்கியானது நாளடைவில் அப்படியே மறைய ஆரம்பிக்கும். செம்மண் குளிர்ச்சி என்பதாலும் மேற்கொண்டு நீரை உறிஞ்சும் தன்மையும் உடையது.இதனால் நமது முன்னோர்கள் காலம் காலமாக இதனை சூட்டு கொப்பளம் இவ்வாறான அழுக்குகள் சேர்ந்து தொற்று ஆகியவற்றுக்கு பூசி வருகின்றனர். அதேபோல இந்த காலகட்டத்திலும் பல ஊர்களில் இதனை வழக்கமாகவே வைத்துள்ளனர்.

மேலும் அக்கி உள்ளவர்கள் உடல் சூட்டை குறைப்பதற்காக தேன் கலந்த தண்ணீர் குடிப்பது நல்லது. மேற்கொண்டு இரவு நேரத்திலேயே சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் முழுவதும் அதனை குடித்து வர உடல் சூட்டை கட்டுப்படுத்த முடியும்.