துளசி இலையை போல் அதன் விதையிலும் அதிக ஆரோக்கிய நன்மைகள் அடங்கி இருக்கு!!
துளசி ஒரு மூலிகை செடியாகும். இவை சளி, இருமல் உள்ளிட்டவைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. அதேபோல் இந்த துளசியில் உள்ள விதைகளும் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை அள்ளி தருபவையாக இருக்கிறது.
துளசியின் வகைகள்:-
1)பச்சை துளசி
2)கருந்துளசி
3)சீனி துளசி
துளசி விதையில் உள்ள சத்துக்கள்:-
*ஆன்டிபயாடிக் பண்புகள்
*இரும்புச் சத்து
*துத்தநாகம்
*பொட்டாசியம்
*வைட்டமின் ஏ, கே
*நார்ச்சத்து
*ஒமேகா -3 கொழுப்பு அமிலம்
துளசி விதையின் பயன்கள்:-
*துளசி விதையை தண்ணீர் ஊற வைத்து பருகி வந்தோம் என்றால் உடலில் புற்றுநோய் செல் உருவாவதை தடுக்க முடியும்.
*சளி, இருமல் பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு இவை சிறந்த நிவாரணமாக இருக்கும்.
*தினமும் துளசி விதை ஊற வைத்த நீர் பருகினால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
*இதில் அதிகளவு நார்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்து இருப்பதினால் சருமம் தொடர்பான பாதிப்பை சரி செய்ய பெரிதும் உதவும்.
*தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி விதை ஊற வைத்த நீர் பருகினால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
*கிட்னி ஸ்டோன் பாதிப்பு இருக்கும் நபர்கள் துளசி விதை ஊற வைத்த தண்ணீர் பருகுவது நல்லது.
*உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்து இரத்தம் தொடர்பான பாதிப்பை சரி செய்ய இவை பெரிதும் உதவுகிறது.
*தினமும் துளசி விதை ஊற வைத்த நீர் பருகினால் மன அழுத்த பாதிப்பு நீங்கும்.
*சுவாச பிரச்சனை இருப்பவர்கள் துளசி இலை மற்றும் அதன் விதையை உண்டு வருவது நல்லது.