செல்வ செழிப்போடு வாழ இந்த இரண்டு மந்திரங்களை 16 முறை கூறுங்கள் போதும் !!

Photo of author

By Divya

செல்வ செழிப்போடு வாழ இந்த இரண்டு மந்திரங்களை 16 முறை கூறுங்கள் போதும் !!

நவீன காலத்தில் பணம் இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது.எதற்குமே பணம் இருந்தால் தான் வேலை ஆகும்.நம்மிடம் பணம் இருந்தால் தான் உறவினர்களே நம்மை மதிப்பார்கள்.தற்போதைய சூழலில் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இங்கு மரியாதை என்ற நிலை உருவாகி விட்டது.இந்நிலையில் இந்த பணத்தை பெருக்க சில வழிகளை கடைபிடிப்பதன் மூலம் வீட்டில் அதிகளவில் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்.

செல்வ செழிப்போடு வாழ என்ன செய்ய வேண்டும்?

நாம் செய்ய போகும் பரிகாரத்தை வளர்பிறை நாளில் தான் செய்ய வேண்டும்.முதலில் வீட்டில் உள்ள பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழையவும்.

பின்னர் வீட்டில் யாரும் புழங்காத பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் எச்சில் படாத தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.பாத்திரம் முழுவதும் ஊற்றவும்.பின்னர் அதில் ஐந்து துளி பன்னீர் விட்டுக் கொள்ளவும்.பின்னர் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்ததாக தங்கம் காசு இருந்தால் அதில் சேர்த்து கொள்ளலாம்.இல்லாத பட்சத்தில் 1 ரூபாய் நாணயம் 8 என்ற எணிக்கையில் எடுத்து அந்த பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

தொடர்ந்து வாசனை நிறைந்த மல்லிகை பூ சிறிதளவு எடுத்து அந்த பாத்திரத்தின் மேல் வைத்து “ஓம் மகாலட்சுமியே நமஹ” என்ற மந்திரத்தை 16 முறை உச்சரிக்க வேண்டும்.

அதேபோல் “ஓம் குபேர லட்சுமி நமஹ” என்ற மந்திரத்தை 16 முறை உச்சரிக்க வேண்டும்.
பின்னர் அந்த தண்ணீரை எடுத்து வைத்துள்ள மல்லிகைப் பூவுடன் சேர்த்து வீட்டில் பணம்,செல்வம் இருக்கும் இடத்தில் தெளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் செல்வத்தை அள்ளி கொடுக்கும் மகா லட்சுமி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.இதனால் வீட்டில் பணம் பெருக தொடங்கி செல்வ செழிப்புடன் வாழ ஆரமிப்போம்.