கறை படிந்த உங்கள் பாத்ரூம் டைல்ஸை பளிச்சென்று மாற்ற இதை தூவி விடுங்கள் போதும்!!

Photo of author

By Divya

கறை படிந்த உங்கள் பாத்ரூம் டைல்ஸை பளிச்சென்று மாற்ற இதை தூவி விடுங்கள் போதும்!!

பாத்ரூமில் படிந்துள்ள அழுக்கு,உப்பு மற்றும் மஞ்சள் கறை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பின்பற்றவும்.

கோல மாவு பொடி

பாத்ரூம் முழுதும் தண்ணீர் ஊற்றி கழுவவும்.அதன் பின்னர் ஒரு கைப்பிடி அளவு கோலமாவை பாத்ரூம் முழுவதும் தூவி விடவும்.

1/2 மணி நேரம் கழித்து ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு பாத்ரூமை டைல்ஸை தேய்த்தால் பல வருட உப்பு மற்றும் மஞ்சள் கறை நீங்கி புதிது போன்று பாத்ரூம் பளிச்சிடும்.

செங்கல் தூள்
வாஷிங் லிக்விட்
வினிகர்

ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் 3/4 பங்கு தண்ணீர் நிரப்பி 1/2 கைப்பிடி அளவு செங்கல் தூள்,2 தேக்கரண்டி வாஷிங் லிக்விட் மற்றும் 3 தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதை பாத்ரூம் முழுவதும் ஊற்றி 15 நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு பாத்ரூமை டைல்ஸை தேய்த்தால் பல வருட உப்பு மற்றும் மஞ்சள் கறை நீங்கி புதிது போன்று பாத்ரூம் பளிச்சிடும்.

ஷாம்பு
எலுமிச்சை சாறு
சோடா உப்பு

ஒரு பாக்கெட்டில் ஒரு பாக்கெட் ஷாம்பு ஊற்றிக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு மற்றும் 1/4 கைப்பிடி அளவு சோடா உப்பு சேர்த்து கலக்கவும்.பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி நுரைத்து வரும் வரை கலக்கி பாத்ரூம் முழுவதும் தெளித்து விடவும்.

1/2 மணி நேரத்திற்கு ஊறவிட்டு பின்னர் ஒரு பிரஷ் கொண்டு பாத்ரூமை செய்யவும்.இவ்வாறு செய்தால் டைல்ஸில் ஒட்டி கிடந்த அழுக்கு,மஞ்சள் மற்றும் உப்பு கறை அடித்துக் கொண்டு வெளியேறும்.