கிட்னியை நன்கு பலப்படுத்த இந்த 7 உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!!

0
173

கிட்னியை நன்கு பலப்படுத்த இந்த 7 உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!!

நமது உடம்பில் இருக்கக்கூடிய பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றக் கூடிய ஒரு முக்கிய பணியை செய்யக்கூடிய உறுப்பு கிட்னி அதாவது சிறுநீரகங்கள் இந்த சிறுநீரகங்கள் பழுதடைந்து விட்டால் உடலில் இருந்து வெளியேற்ற படாத கழிவுகள் உடலின் முகம் கை கால் உதடுகள் என அனைத்திடங்களிலும் தேங்கும்.

உடலில் இருந்து வெளியேற்ற படாத சிறுநீர் உடலின் உள்ளுறுப்புகளிலும் குறிப்பாக நுரையீரல் மற்றும் இருதயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கும். இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மரணம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. பொதுவாக இந்த கிட்னி பிரச்சனையானது சர்க்கரை நோய் உள்ளவர்கள் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் போன்றவர்களை எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது.

பொதுவாக நோய் வந்த பிறகு என்ன செய்வது என்று யோசிக்காமல் இந்த நோயை எவ்வாறு வரவிடாமல் தடுப்பது என்று யோசிப்பதே புத்திசாலித்தனமாகும். அதன் வகையில் கிட்னியை பலப்படுத்தக்கூடிய ஏழு உணவு வகைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

1. பூண்டு
தினமும் சமைக்கும் உணவுகளில் பூண்டு இருப்பது போல் சமைத்தாலே இதய நோய்கள் எதுவும் வராமல் தடுக்க முடியும். உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் கரைந்து ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் கிட்னி ஆரோக்கியமாக இருக்கும் மேலும் சிறுநீரகங்களில் ஏற்படக்கூடிய அனைத்து தொற்றுகளையும் சரி செய்யக்கூடிய சக்தி இந்த பூண்டில் உள்ளது.

2. கொத்தமல்லி
கொத்தமல்லி சிறுநீரகங்களில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்ற மிகவும் பயன்படுகிறது. இந்த கொத்தமல்லி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து தண்ணீரில் போட்டு பத்து நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர சிறுநீரகங்களில் இருக்கக்கூடிய அனைத்து கிருமிகளும் வெளியேறும்.

3. கருப்பு திராட்சை
இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சிறுநீரகங்களில் தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இந்த திராட்சையில் இருக்கக்கூடிய அமிலங்கள் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

4. இஞ்சி
இஞ்சியில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட் சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கு மிகவும் உகந்தது. இந்த இஞ்சி உடம்பில் இருக்கக்கூடிய ரத்தக் குழாய்கள் மற்றும் சிறுநீரகங்களை சுத்தம் செய்யும் ஆற்றல் வாய்ந்தது. பொதுவாக இஞ்சி அஜீரணம் மற்றும் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. உடலின் செரிமானம் சீராக இருந்தாலே உடம்பில் இருக்கக்கூடிய அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

5. முட்டைகோஸ்
ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கான ஒரு மிகச்சிறந்த உணவாக இந்த முட்டைகோஸ் சொல்லப்படுகிறது. இதில் இருக்கக்கூடிய பழமையான ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல் பிற உறுப்புகளுக்கும் நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. இதில் இருக்கக்கூடிய பைட்டோ கெமிக்கல்கள் சிறுநீரகத்தில் நீர் கட்டிகள் வராமல் தடுக்கிறது.

6. மீன்
மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருப்பதால் இதை சிறுநீரகத்தை நோய்கள் எதுவும் தாக்காமல் பாதுகாத்து வருகிறது. சூறை, கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன் வகைகளில் அதிக அளவு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. மீன்களை வருத்து உண்ணாமல் குழம்பாக செய்து வாரத்திற்கு இருமுறை சாப்பிட்டு வர சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது.

7. வெங்காயம்
வெங்காயத்தை தினமும் உணவில் அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வர இயற்கையாகவே சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்க முடியும். மேலும் இது சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும் உதவுகிறது. அடிக்கடி சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது.

உணவில் உப்பை அதிகமாக சேர்க்காமல் இருப்பது, சிறுநீரை வெகு நேரத்திற்கு அடக்கி வைக்காமல் இருப்பது, மது மற்றும் புகை பிடிக்காமல் இருப்பது, தினமும் உடற்பயிற்சி செய்வது, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய் வராமல் பார்த்துக் கொள்வது, தண்ணீர் நிறைய அருந்துவது, இனப்பெருக்க உறுப்பை தினமும் சுத்தமாக வைத்துக் கொள்வது என அனைத்தையும் கடைபிடித்து வந்தால் சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகள் எதுவும் வராமல் தடுக்கலாம்.

Previous articleஒரு டம்ளர் போதும்!! தொப்பை மெழுகு போல் உருகி கரைந்து விடும்!!
Next articleசிறு வயதிலேயே முகத்தில் சுருக்கம் வந்து விட்டதா!! கவலை வேண்டாம் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!!