சிறு வயதிலேயே முகத்தில் சுருக்கம் வந்து விட்டதா!! கவலை வேண்டாம் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!!

0
41

சிறு வயதிலேயே முகத்தில் சுருக்கம் வந்து விட்டதா!! கவலை வேண்டாம் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!!

பெரும்பாலானோருக்கு 25 வயதிலேயே தோல் சுருக்கங்கள் அதாவது வயதானது போல் சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு காணப்படுகிறது. இந்த தோல் சுருக்கங்கள் மிகச் சிறிய வயதிலேயே ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால் உடம்பில் நீர்ச்சத்து குறைவது தான்.

எனவே தினமும் நிறைய தண்ணீரை பருக வேண்டும் நம் எந்த அளவிற்கு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவிற்கு நம் உடம்பில் நீர்ச்சத்து அதிகரிக்கும். இதனால் இளமையிலேயே ஏற்படக்கூடிய முதுமை தோற்றத்தை தடுக்க முடியும் மேலும் முகமும் நன்கு பளபளப்பாக அழகாக காணப்படும். இந்த தோல் சுருக்கத்தை தடுக்க கூடிய ஒரு அருமையான இயற்கை தீர்வை இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன சீரகம் அல்லது சீரகப்பொடி
கற்றாழை ஜெல் அல்லது பேபி ஆயில் அல்லது ஆலிவ் ஆயில்
எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாறு
அரிசி மாவு அல்லது கடலை மாவு அல்லது கோதுமை மாவு

செய்முறை:
இதற்கு நமக்கு முதலில் தேவைப்படுவது சின்ன சீரகம். இந்த சீரகத்தை வெயிலில் அரை மணி நேரம் வைத்து எடுத்து பொடியாக்கி பிறகு சலித்து எடுத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது சீரக பொடி மளிகை கடைகளில் கிடைக்கும் அதை வாங்கியும் இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு பௌலில் அரை தேக்கரண்டி அளவு இந்த சின்ன சீரகம் பொடியை சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் அரை தேக்கரண்டி அளவு கற்றாழை ஜெல்லையும் சேர்த்துக் கொள்ளவும். கற்றாழை ஜெல் இல்லாத பட்சத்தில் பேபி ஆயில் ஆலிவ் ஆயிலை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இதனுடன் அரை தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறை சேர்த்துக் கொள்ளவும். எலுமிச்சைச்சாறு உங்களுக்கு ஒத்துக்காது என்றால் தக்காளி சாறை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இறுதியாக இதனுடன் அரை தேக்கரண்டி அளவு அரிசி மாவை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அரிசி மாவு இல்லாத பட்சத்தில் கடலை மாவு அல்லது கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளலாம். இவற்றையெல்லாம் சேர்த்து ஒரு பேஸ்ட் ஆக கலந்து சுருக்கங்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் தேய்க்க வேண்டும். இதை இரவு நேரங்களில் தேய்த்தால் மிகவும் நல்லது.

இரவு நேரங்களில் இதை செய்ய முடியாதவர்கள் எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது செய்து வரலாம். இதை முகத்தில் தடவுவதற்கு முன்பாக முகத்தை நன்கு கழுவி துடைத்து விட்டு பிறகு இந்த பேஸ்ட்டை தடவி நன்றாக தேய்க்க வேண்டும். இந்த பேஸ்ட்டை தேய்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு நன்கு மசாஜ் செய்தால் போதும். இதில் இருக்கக்கூடிய சாறை சருமம் நன்றாக உட்கவர்ந்து கொள்ளும்.

முகத்தில் பருக்கள் இருப்பவர்கள் அதிகமாக தேய்க்காமல் அப்படியே விட்டு விடவும். இதை முகத்தில் தேய்த்து இருபதில் இருந்து 25 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். 25 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவி விடவும். எந்த ஒரு சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் கிரீமோ பயன்படுத்தாமல் வெறும் தண்ணீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.

இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று செய்து வர ஒரு வாரத்திலேயே நம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவுடன் மிகவும் அழகாக காட்சியளிக்கும்.

பொருட்களின் பயன்கள்:
இதில் பயன்படுத்தி இருக்கக்கூடிய சின்னஞ்சிறகமானது பொதுவாகவே உடலில் இருக்கக்கூடிய அனைத்து உறுப்புகளையும் சுத்தம் செய்யும் தன்மை வாய்ந்தது. இதை எந்த அளவிற்கு நம் உடம்புக்கு எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நமக்கு இளமை தோற்றத்தை இது அளிக்கும். அதேசமயம் வயிற்றை சுத்தம் செய்வதிலும் இது முக்கிய பங்காற்றுகிறது.

 

author avatar
CineDesk