7 தினங்களில் பொடுகு நீங்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

Photo of author

By Divya

7 தினங்களில் பொடுகு நீங்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!

1)ஒரு கப் தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதில் 5 அல்லது 6 மிளகு சேர்த்து காய்ச்சி ஆறவிட்டு எண்ணெயை வடிகட்டி தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு நீங்கும்.

2)உங்கள் தலை முடிகளுக்கு ஏற்ப வெந்தயத்தை எடுத்து ஊறவைத்து அரைத்து பேஸ்டாக்கி முடிகளுக்கு பயன்படுத்தி குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

3)வேப்பிலை, வெந்தயம் தேவையான அளவு எடுத்து கொள்ளவும். இரண்டையும் உலர்த்தி பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி ஆறவிட்டு தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு நீங்கும்.

4)ஒரு கப் தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதில் 6 பல் பூண்டு சேர்த்து காய்ச்சி ஆறவிட்டு தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு நீங்கும்.

5)தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு நீங்கும்.

6)இயற்கை கற்றாழை ஜெல்லை தலைக்கு உபயோகிப்பதினால் பொடுகு பாதிப்பு ஏற்படாது.

7)எலுமிச்சை தோலில் சிறிது தூள் உப்பு சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.

8)சின்ன வெங்காயம் மற்றும் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக்கி தலைக்கு உபயோகித்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.