கூட்டணி கட்சியால் தொகுதி மாறி போட்டியிடும் ஜோதிமணி மற்றும் திருநாவுகரசு?
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக ‘இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ், கொங்கு நாடு, மார்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அகில இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.
திமுக மற்றும் காங்கரஸ் கட்சி இடையே கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸிக்கு தமிழகத்தில் ஒன்பது மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்னும் எந்தெந்த தொகுதிகள் என உறுதி செய்யப்படாத நிலையில் கரூர் மற்றும் திருச்சி தொகுதி இரண்டும் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே அந்த தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிப் பெற்ற ஜோதி மணி மற்றும் திருநாவகரசு இருவரும் சொந்த தொகுதி அன்றி வேறோரு தொகுதியில் மாறி போட்டியிட உள்ளனர்.
கரூருக்கு பதிலாக திண்டுக்கல் தொகுதியிலும், திண்டுக்கல் தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறை தொகுதியிலும் மாறி போட்டியிட ஜோதிமணி மற்றும் திருநாவுகரசு ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.