மார்பு சளி பாதிப்பை நிமிடத்தில் குணமாக்கும் “கற்பூரவல்லி டானிக்” – தயார் செய்வது எப்படி?

0
213
#image_title

மார்பு சளி பாதிப்பை நிமிடத்தில் குணமாக்கும் “கற்பூரவல்லி டானிக்” – தயார் செய்வது எப்படி?

சாதாரண சளி நாளடைவில் நெஞ்சு சளியாக உருவெடுத்து நமக்கு தீராத தொல்லையாக மாறி விடுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். இந்த மார்பு சளியால் மூச்சு விடுதலில் சிரமம், தொண்டைப்புண் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிவிடுகிறது.

தொண்டை வலி, தொண்டை புண், நீஞ்சு அனத்தம், தலைவலி, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு
மூச்சு விடுதலில் சிரமம், வறட்டு இருமல், உடல் சோர்வு உள்ளிட்டவைகள் மார்பு சளிக்கான அறிகுறிகள் ஆகும். இந்த பாதிப்பை கற்பூரவல்லி இலையை வைத்து எளிதில் குணமாக்கிவிட முடியும்.

தேவையான பொருட்கள்:-

*கற்பூரவல்லி

*தேன்

செய்முறை…

முதலில் 30 கற்பூரவல்லி இலைகளை எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் அடுபில் ஒரு வாணலி வைத்து கற்பூரவல்லி இலைகளை போட்டு மிதமான தீயில் வதக்கி எடுக்கவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் வதக்கி வைத்துள்ள கற்பூரவல்லி இலைகளை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்தால் கற்பூரவல்லி டானிக் தயார். மார்பு சளி பாதிப்பு இருக்கும் நபர்கள் இதை 2 ஸ்பூன் என்ற அளவில் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் குணமாகி விடும்.