குருநாதர் என்றும் பாராமல் பாலச்சந்தரிடம் சண்டைக்கு சென்ற கமல்; என்ன காரணம் தெரியுமா?
தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படுபவர் தான் இயக்குனர் கே.பாலச்சந்தர். 1965 ஆம் ஆண்டு நாகேஷை வைத்து இவர் இயக்கிய நீர்க்குமிழி என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் பாலச்சந்தர் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன்னதாக சில படங்களில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இயக்குனர் பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் பல உன்னதமான படைப்புகளை வழங்கியுள்ளதோடு, ரஜினி கமல் போன்ற திறமையான நடிகர்களையும் அவர் தான் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் பாலச்சந்தர் சம்பள விஷயத்தில் கொஞ்சம் கஞ்சன் என்று கூறப்படுகிறது.
அதாவது ஆரம்ப காலகட்டத்தில் ரஜினி கமல் போன்ற பெரிய ஹீரோக்களுக்கே பாலச்சந்தர் வெறும் 500 ரூபாய் தான் சம்பளம் வழங்குவாராம். இதனால் ஒருமுறை நடிகர் கமல் இயக்குனர் பாலச்சந்தரிடம் சண்டைக்கு என்ற சம்பவம் கூட நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் நாகேஷை வைத்து 1973ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய அரங்கேற்றம் என்ற படத்தில் தான் கமலை அறிமுகம் செய்து வைத்தாராம். அந்த படத்தில் நடித்ததற்காக கமலுக்கு இயக்குனர் பாலச்சந்தர் வெறும் 350 ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளார். இதில் கடுப்பான கமல் 40 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளேன் மேலும் ஒரு 150 ரூபாய் போட்டு கொடுங்கள் என்று சண்டையிட்டாராம்.
ஆனால் பாலச்சந்தரோ அடுத்த படத்தில் பார்த்து கொள்ளலாம் போடா என்று கூறி விட்டாராம். ஒருவேளை கமல் அன்று கோபப்பட்டு சினிமாவே வேண்டாம் என்று சென்றிருந்தால், இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் உலகநாயகனாக அவர் வளர்ந்திருக்க மாட்டார்.