காஞ்சனா 3 பட நடிகை தற்கொலை! இறந்த நிலையில் உடல் கோவாவில் மீட்பு!

Photo of author

By Kowsalya

ரஷ்யாவின் மாடல் மற்றும் நடிகரான அலெக்ஸாண்ட்ரா அவர் காஞ்சனா 3 திரை படத்தில் தமிழில் நடித்துள்ளார். அவருடைய உடல் இறந்த நிலையில் வெள்ளிக்கிழமை அன்று கோவாவில் உள்ள அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது.

அலெக்ஸாண்ட்ரா காஞ்சனா 3 படத்தில் அவரது தோற்றத்தைப் பற்றி பேசுகையில் அவர் பேயாக நடித்து இருந்தார். 2019 இல் வெளியான இந்தப் படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கினார். அதில் அலெக்ஸாண்ட்ரா திகில் திரில்லர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அதில் ஓவியா, வேதிகா, மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் படத்தில் கதாநாயகிகளாக நடித்து இருந்தனர்.

24 வயது நிறைந்த அலெக்ஸாண்ட்ரா அவர்கள் கடைசியாக வந்த தகவலின் படி போலீசார் பரிசோதனை செய்ததில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் போலீஸார் போஸ்ட்மார்ட்டம் பின்னரே தகவல்களை தெளிவாக சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

 

மேலும் அப்பகுதி மக்களை விசாரித்த போலீசார், வடக்கு கோன் கிராமத்தில் உள்ள உள்ளூர்வாசிகள் இடம் விசாரித்த பொழுது, சமீபத்தில் அலெக்சாண்டாவின் காதலர் அவரை விட்டுச் சென்றதால் அவர் மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாக குற்றம் சாட்டினர். அதனால் வரும் நாட்களில் அலெக்சாண்டிராவின் காதலனை போலீசார் விசாரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் 2019 ஆம் ஆண்டில் அந்த நடிகை சென்னையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதுவும் பாலியல் துன்புறுத்தல் பிரிவில் குற்றம் சாட்டப்பட்டு அந்த நபர் கைது செய்யப்பட்டார். எனவே அவரிடமும் இப்பொழுது விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.