வாயு தொல்லையை சரி செய்யும் “கற்பூரவள்ளி இலை குழம்பு” – செய்வது எப்படி?

0
107
#image_title

வாயு தொல்லையை சரி செய்யும் “கற்பூரவள்ளி இலை குழம்பு” – செய்வது எப்படி?

இன்றைய காலத்தில் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது வாயு தொல்லை.இந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வாயுத் தொல்லையை நீக்குவதில் கற்பூரவள்ளி முக்கிய பங்கு வைக்கிறது.இந்த கற்பூரவள்ளி செரிமா கோளாறு,வாயு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*கற்பூரவள்ளி இலை -15

*வர மிளகாய் -15

*புளி – ஒரு பெரிய எலுமிச்சை பழ அளவு

*கடுகு – 1 தேக்கரண்டி

*வெந்தயம் – 1 தேக்கரண்டி

*மிளகு – 1 தேக்கரண்டி

*சீரகம் – 1 தேக்கரண்டி

*வடகம் – 1 தேக்கரண்டி

*சின்ன வெங்காயம் – 10

*பூண்டு பல் – 1 கைப்பிடி அளவு

*தேங்காய் – 2 தேக்கரண்டி(துருவியது)

*உப்பு – தேவையான அளவு

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*நல்லெண்ணெய் – 6 தேக்கரண்டி

*வெல்லம் – சிறிதளவு

*கருவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:-

ஒரு பவுல் எடுத்து அதில் புளியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் அதில் வர மிளகாயை சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.பின்னர் இவற்றை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.இதை நன்கு ஆற விடவும்.

பிறகு அதே கடாயில் மிளகு,சீரகம்,வடகம்,பூண்டு பற்கள்,துருவிய தேங்காய் சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும்.பின்னர் அதில் 15 கற்பூரவள்ளி இலையகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.பின்னர் இதை நன்கு ஆறவிடவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஆறவைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு அரைக்கவும்.
அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் காடாய் வைத்து 6 தேக்கரண்டி நல்லெண்ணையை ஊற்றவும்.அவை சூடேறியதும் கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிய விடவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம்,1 கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை அதில் சேர்த்து கொதிக்க விடவும்.பின்னர் சிறிதளவு மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து குழம்பு வற்றும் வரை கொதிக்க விடவும்.இவை நன்கு கொதித்து எண்ணெய் பிரியும் சமயத்தில் சிறு துண்டு வெல்லம் சேர்த்து கொள்ளவும்.பிறகு அடுப்பை அணைக்கவும்.