காராமணி கறி.. கேரளா ஸ்டைலில்..!

Photo of author

By Divya

காராமணி கறி.. கேரளா ஸ்டைலில்..!

அதிக சத்துக்கள் நிறைந்த காராமணியை வைத்து செம்ம டேஸ்டில் கறி செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்

1)காராமணி – 1 கப்
2)தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்
3)கடுகு – 1 ஸ்பூன்
4)சீரகம் – 1/2 ஸ்பூன்
5)பட்டை – 1துண்டு
6)ஏலக்காய் – 1
7)கிராம்பு – 2
8)மிளகு – 1/4 ஸ்பூன்
9)வரமளகாய் – 1
10)சின்ன வெங்காயம் – 10
11)இஞ்சி – 1ஸ்பூன் (நறுக்கியது)
12)பூண்டு – 1ஸ்பூன் (நறுக்கியது)
13)துருவிய தேங்காய் – 2 ஸ்பூன்
14)தக்காளி – 1
15)பச்சை மிளகாய் – 2
16)மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
17)மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
18)கொத்தமல்லி தூள் – 1ஸ்பூன்
19)கறிவேப்பிலை – 1 கொத்து
20)உப்பு – தேவையான அளவு
21)கொத்தமல்லி தழை – சிறிதளவு

காராமணி கறி.. செய்முறை..

காராமணியை கழுவி குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 அல்லது 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். பிறகு கடுகு, சீரகம், பட்டை, கிராம்பு,ஏலக்காய், நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அடுத்து நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி எடுக்கவும்.

பிறகு இடித்த மிளகு, நறுக்கிய தக்காளி சேர்த்து கிளறி விடவும். அதன் பின்னர் மஞ்சள்தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து கலந்து விடவும்.

தக்காளி கலவை நன்கு வதங்கியதும் மிளகாய் தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விடவும். உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து வேக வைத்த காராமணியை சேர்த்து கிளறி விடவும்.

காராமணி கறியை இறக்கும் தருணத்தினால் கொத்தமல்லி தழை மற்றும் கருவேப்பிலை சேர்த்து கலந்து விடவும்.