பாக்யராஜ் உடன் பேசினால் 2 நாள் பாரதிராஜா பேசமாட்டார்! மணிவண்ணன் பேட்டி

0
173
#image_title

 

 

தற்போது பாரதிராஜாவை பற்றி மணிவண்ணன் பேசிய வீடியோ ஒன்று பரவலாக போய்க்கொண்டிருக்கிறது.

 

என்னதான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பாக்கியராஜ் அவர்கள் பணிபுரிந்து இருந்தாலும் ,அவர் மீதும், அவர் படத்தை இயக்குவார் என்ற நம்பிக்கையே பாரதிராஜாவிற்கு இல்லாமல் போனது, என்று மணிவண்ணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

1980-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் என்ற படத்தின் மூலம் எழுத்தாளர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் மணிவண்ணன். அதனைத் தொடர்ந்து, அலைகள் ஓய்வதில்லை, ஆகாய கங்கை, காதல் ஓவியம் உள்ளிட்ட படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய மணிவண்ணன், 1982-ம் ஆண்டு வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

 

மோகன், ராதா, சுஹாசினி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் மணிவண்ணனுக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது, அதனைத் தொடர்ந்து,24 மணி நேரம், விடிஞ்சா கல்யாணம், பாலைவன ரோஜாக்கள், ஜல்லிக்கட்டு, அமைதிப்படை, இளமை கோலங்கள், நூறாவது நாள், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்

 

இதில் மணிவண்ணன் சத்யராஜ் கூட்டணியில் வெளிவந்த அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்த நிலையில், 1993-ம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்து வெளியானது அமைதிப்படை. இந்தப் படத்தை மிஞ்சும் அரசியல் எதுவும் இல்லை என்று என்றெல்லாம் போற்றப்படுகிறது. கடைசியாக 2013-ம் ஆண்டு நாகராஜ சோழன் படத்தை இயக்கிய மணிவண்ணன், அதே ஆண்டு மரணமடைந்தார்.

 

 

மணிவண்ணன் கூறியதாவது “எனக்கு அரசியல் ஆசை எல்லாம் இல்லை. எனக்கு ஏகப்பட்ட கட்சிகள் தெரியும். அதனால் அதை நான் சமாளித்து விடுவேன். ஆனால் அது எனக்கு பிடிக்காது. எனக்கு மக்களின் மூலம் வரும் அரசியல் போதும் என்று அவர் சொல்லியிருந்தார். பாரதிராஜாவுக்கு நான் இயக்குனர் ஆவேன் என்ற நம்பிக்கை இல்லை. இவன் எங்கயா டைரக்ட் பண்ணப்போறான் என்று அவரை தவிர மற்ற எல்லாரையும் அப்படித்தான் சொல்வார்”.

 

பாக்யராஜை கூட அப்படித்தான் சொல்வார் அவர். பாக்கியராஜ் உடன் உனக்கு என்ன பேச்சு என்று என்னிடம் கேட்பார். இல்ல சார் ஒரு ஊர் காரங்க ஒன்னா சுத்திட்டு இருக்கோம் என்று சொன்னால் அந்த வேலையே வச்சிக்காத என்று சொல்லி 2 நாளைக்கு பேசமாட்டார். அந்த மாதிரி இயக்குனர் அவர். அவதான் சிபாரிசு செய்து முதல் இயக்குனர் ஆகும் அறிமுகம் எனக்கு கிடைத்தது என்றால் நம்பி விடாதீர்கள், என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்..

author avatar
Kowsalya