கராத்தே மாஸ்டர் உல்லாசம்!! மாணவிக்கு திருமண ஆசை!!

Photo of author

By Parthipan K

கராத்தே மாஸ்டர் உல்லாசம்!! மாணவிக்கு திருமண ஆசை!!

Parthipan K

Karate Master Hilarious!! The student wants to get married!!

கராத்தே மாஸ்டர் உல்லாசம்!! மாணவிக்கு திருமண ஆசை!!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி +2 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் வயது 23 கராத்தே மாஸ்டர்.

கராத்தே மாஸ்டர்  பிரவீன்குமார் அதே பகுதியில் +2 படித்து வரும் மாணவியை காதலிப்பதாக கூறி திருமண ஆசைக் காட்டி பலமுறை மாணவியிடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

மாணவியின் வீட்டிற்கு தெரிய வரவே, மாணவியின் பெற்றோர்கள் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரித்த பொழுது, கராத்தே மாஸ்டர்  பிரவீன்குமார் மீது ஏற்கனவே இதுபோன்ற வழக்கு ஒன்று தானிப்பாடி காவல் நிலையத்தில்  நிலுவையில் உள்ளதாக தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கராத்தே மாஸ்டர்  பிரவீன்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.