ஒரு நாள் மட்டும் இதை வையுங்க!! இனி ஒரு எலி கூட உங்க வீட்டு வீட்டுப் பக்கம் அண்டாது!! 100% தீர்வு இருக்கு!!

0
35
#image_title

ஒரு நாள் மட்டும் இதை வையுங்க!! இனி ஒரு எலி கூட உங்க வீட்டு வீட்டுப் பக்கம் அண்டாது!! 100% தீர்வு இருக்கு!!

நம்மில் பலர் வீடுகளில் எலி நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்த எலி அளவில் சிறியவை என்றாலும் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கிறது. எலி தொல்லை இருக்கும் வீட்டில் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். இந்த ஆபத்து நிறைந்த எலிகளை விரட்ட நாமும் பல வழிகளை மேற்கொண்டு இருப்போம். ஆனால் பலன் ஏதும் கிடைத்தபாடில்லை என்பது தான் நிதர்சனம்.

*வீட்டிற்கு அருகில் சாக்கடை, டிச்சி உள்ளிட்டவைகள் இருந்தால் எலி பெருக்கம் அதிகம் இருக்கும். இதனால் எலிகள் வீட்டிற்குள் வர அதிக வாய்ப்பு இருக்கிறது.

*வீட்டிற்குள் உணவுப் பொருட்கள் சிதறிக் கிடந்தால் அதை மோப்பம் பிடித்துக் கொண்டு எலிகள் வீட்டிற்குள் வந்து விடும்.

*மண் தரை உள்ள வீடு, ஓட்டு வீடு, குடிசை வீடு ஆகியவற்றில் எலிகள் எளிதில் நுழைந்து உற்பத்தியாகி விடும்.

எலியால் பரவும் உயிருக்கு ஆபத்து நிறைந்த நோய்கள்:-

*லெப்டோஸ்பிரோசிஸ் எனும் மரணத்தை ஏற்படுத்தும் நோய் எலியின் சிறுநீர் மூலம் பரவுகிறது.

*ஹெப்படைடிஸ் ஈ என்ற கிருமிகள் எலியின் மூலம் பரவுகிறது.

*கொடிய நோயான பிளேக் நோய் எலியின் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*கருப்பு மிளகு – 1/4 கப்

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் 1/4 கப் அளவு கருப்பு மிளகு சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும்.

இந்த மிளகுப் பொடியை வீட்டில் எலி நடமாட்டம் இருக்கும் அனைத்து இடங்களிலும் தூவி விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் எலி நடமாட்டம் முற்றிலும் நீங்கும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*பெரிய வெங்காயம் – 1

*பூண்டு – 10 பற்கள்

செய்முறை:-

1 பெரிய வெங்காயம் மற்றும் 10 பல் பூண்டை தோல் நீக்கி கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு பவுலுக்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸ் பண்ணவும்.

அடுத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இந்த வெங்காயம் + பூண்டு சாற்றை ஊற்றி வீட்டில் எலி நடமாட்டம் இருக்கும் இடங்களில் ஸ்ப்ரே செய்து விடவும். வெங்காயம் மற்றும் பூண்டு வாசனை எலிகளுக்கு பிடிக்காது. எனவே இந்த வெங்காயம் மற்றும் பூண்டு சாற்றை ஸ்ப்ரே செய்வதன் மூலம் வீட்டில் எலி நடமாட்டம் இருக்காது.

தீர்வு 3:

தேவையான பொருட்கள்:-

*பிரியாணி இலை – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு பிரியாணி இலை சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும். இந்த பிரியாணி இலை பொடியை வீட்டில் எலி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தூவி விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் எலி தொல்லை இருக்காது.

தீர்வு 4:

தேவையான பொருட்கள்:-

*பாரசிட்டமால் மாத்திரை – 2

*கோதுமை மாவு – 2 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு உரலில் 2 பாராசிட்டமால் மாத்திரை போட்டு இடித்து நன்கு பொடி செய்து கொள்ளவும். அடுத்து ஒரு பவுலில் இடித்து வைத்துள்ள பாராசிட்டமால் பவுடரை சேர்க்கவும்.

பின்னர் 2 தேக்கரண்டி கோதுமை மாவு சேர்க்கவும். கோதுமை மாவு இல்லாதவர்கள் கடலை மாவு கூட சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். இந்த உருண்டைகளை எலி நடமாட்டம் ஏறும் இடங்களில் வைத்தால் எலிகள் அதை உண்டு வயிறு வீங்கி இறந்து விடும்.