கேரளா பெண்களை போல் முடி அடர்த்தியாகவும்.. கருமையாகவும் வளர இந்த எண்ணையை தொடர்ந்து யூஸ் பண்ணுங்க!!
பெண்கள் பலர் முடி உதிர்வு பாதிப்பால் அவதி அடைந்து வருகிறோம். இதற்கு வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றம் காரணமாக சொல்லப்படுகிறது. தலை முடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் முடி உதிர்தல், வழுக்கை உள்ளிட்ட பாதிப்புகளை பெண்கள் இளம் வயதில் சந்திக்கும் நிலை ஏற்பட்டு விடும்.
தலைமுடி உதிரக் காரணங்கள்:-
*பொடுகு தொல்லை
*முறையற்ற தூக்கம்
*மன அழுத்தம்
*இரசாயனம் கலந்த ஷாம்புவை தலைக்கு உபயோகிப்பது
இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*கறிவேப்பிலை – 1 கையளவு
*வெந்தயம் – 1 தேக்கரண்டி
*செம்பருத்தி தூள் – 2 தேக்கரண்டி
*சின்ன வெங்காயம் – 10
*தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்
*கற்றாழை ஜெல் – சிறிதளவு
*மிளகுத் தூள் – சிறிதளவு
எண்ணெய் காய்ச்சும் முறை…
மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, 10 தோல் நீக்கிய சின்ன வெங்காயம், 1 தேக்கரண்டி ஊறவைத்த வெந்தயம், சிறிதளவு கற்றாழை ஜெல், 2 தேக்கரண்டி செம்பருத்தி தூள் சேர்த்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் அரைத்த விழுதை சேர்த்து 10 முதல் 12 நிமிடங்களுக்கு காய்ச்சவும். அடுத்து சிறிதளவு மிளகுத் தூள் சேர்த்து காய்ச்சி அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை நன்கு ஆறவிட்டு ஒரு ஈரமில்லாத பாட்டிலுக்கு வடிகட்டி சேமித்து வைத்துக் கொள்ளவும்.
இதை தினமும் தலை முடிகளுக்கு தேய்த்து வந்தோம் என்றால் கூந்தல் கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர்த் தொடங்கும்.