உடலுக்கு ஆரோக்கியம் தரும் கேரளா சூடு வெள்ளம்!! இதை தயாரிப்பது எப்படி?

Photo of author

By Divya

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கேரளா சூடு வெள்ளம்!! இதை தயாரிப்பது எப்படி?

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் மூலிகைகளில் ஒன்று பதிமுகம். இந்த பதிமுகம் உடல் சூட்டை தணிக்க கூடிய குளிர்ச்சி நிறைந்த பொருள். பதிமுகத்தை நீரில் போட்டு காய்ச்சினால் அவை இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறும்.

இந்த பதிமுக நீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இந்த பதிமுக பட்டை நீர் செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. அதுமட்டும் இன்றி உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது.

சூடு வெள்ளம் என்று அழைக்கப்படும் பதிமுகப்பட்டை நீரை கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பதிமுகம் பட்டை – 2
2)சீரகம் – 1 தேக்கரண்டி
3)தண்ணீர் – 1 லிட்டர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் 2 துண்டு பதிமுகம் பட்டை மற்றும் 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

இந்த சூடு வெள்ளத்தை நன்கு ஆறவைத்து குடிக்கவும்.