கேரளா கடுகு மாங்கா அசார் – சுவையாக செய்வது எப்படி?

0
118
#image_title

கேரளா கடுகு மாங்கா அசார் – சுவையாக செய்வது எப்படி?

கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை அன்று “கடுகு மாங்கா அசார்” செய்வதை கேரளா மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். நம் தமிழகத்தில் மாங்காய் ஊறுகாய் என்று சொல்வதை தான் அம்மாநில மக்கள் கடுகு மாங்கா அசார் என்று அழைக்கின்றனர்.

தேவையான பொருட்கள்

*மாங்காய் – ஒன்று
*தனி மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
*மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
*வெந்தயத்தூள் – 1/4 ஸ்பூன்
*பெருங்காயம் – ஒரு சிட்டிகை
*உப்பு – தேவையான அளவு
*தேங்காய் ஏ எண்ணெய் – தேவையான அளவு
*கடுகு – 1/4 ஸ்பூன்
*கறிவேப்பிலை – 1 கொத்து
*வர மிளகாய் – 1

கடுகு மாங்கா அசார்.. செய்வது எப்படி?

1)ஒரு பச்சை மாங்காய் எடுத்து ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ளவும்.

2)இந்த மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு கலந்து ஒரு இரவு வரை ஊற விடவும்.

3)மாங்காய் நன்கு ஊறியப் பின்னர் ஊறுகாய் செய்ய ஆரம்பிக்கவும். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

4)எண்ணெய் சூடானதும் எடுத்து வைத்துள்ள கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

5)அடுத்து வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி அதில் சேர்க்கவும். பிறகு வர மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள் மற்றும் தூள் உப்பு சேர்த்து கலக்கவும்.

6)பிறகு அதில் ஊறவித்துள்ள மாங்காயை சேர்த்து நன்கு கலந்து விடவும். மாங்காய் கலவை நன்கு வெந்து வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும். பிறகு காற்று புகாத கண்ணாடி ஜாரில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.