Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தேங்காய் பர்ஃபி – சுவையாக செய்வது எப்படி?
தேங்காய் பர்ஃபி கேரளா பாணியில் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய்(துருவியது) – 1 கப்
2)சர்க்கரை – 3/4 கப்
3)நெய் – தேவையான அளவு
4)முந்திரி(நறுக்கியது) சிறிதளவு
5)ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடாக்கவும். அதன் பின்னர்
நறுக்கி வைத்துள்ள முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி 1/4 கப் தண்ணீர் மற்றும் 3/4 கப் சர்க்கரை சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும்.
அதன் பின்னர் சர்க்கரை கரைந்து சிறிது கெட்டியான பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து கைவிடாமல் தொடர்ந்து கிளறவும்.
நன்கு கிளறி விட்ட பின்னர் நெயில் வறுத்த முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து சில நிமிடங்களுக்கு கிளறவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி வைக்கவும்.
பிறகு கத்தியால் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஆறவிட்டு எடுத்தால் சுவையான தேங்காய் பர்ஃபி தயார்.