செடிகளில் உருவாகும் புழுக்களை அழிக்க உதவும் “அக்னி அஸ்திரம்”!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது!!

0
42
#image_title

செடிகளில் உருவாகும் புழுக்களை அழிக்க உதவும் “அக்னி அஸ்திரம்”!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது!!

செடி, கொடி காய்கறிகளில் உருவாகும் தண்டுதுளைப்பான் மற்றும் புழுக்களை அழிக்க அக்னி அஸ்திரம் பயன்படுத்துங்கள். இது இயற்கை புழு விரட்டி ஆகும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை
2)புகையிலை
3)பச்சை மிளகாய்
4)பூண்டு
5)மாட்டு கோமியம்

செய்முறை:-

முதலில் 1/2 கிலோ பூண்டு மற்றும் 1/2 கிலோ பச்சை மிளகாயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் புகையிலை 1/2 கிலோ அளவு எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதேபோல் வேப்பிலை 1/2 கிலோ அளவு எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் மாட்டு கோமியம் 10 லிட்டர் அளவு ஊற்றி அரைத்த பூண்டு, பச்சை மிளகாய் பேஸ்டை சேர்க்கவும்.

அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள புகையிலை மற்றும் வேப்பிலை சேர்த்து ஒரு குச்சி கொண்டு கிளறி விடவும்.

மாட்டு கோமியத்தில் சேர்த்த பொருட்கள் அனைத்தும் நன்கு கொதித்து வர வேண்டும். பிறகு இந்த பாத்திரத்தை நிழலில் வைத்து ஒரு துணி போட்டு மூடி விடவும். இவை 48 மணி நேரத்திற்கு ஆற வேண்டும்.

அதன் பின்னர் தயாரித்த அக்னி அஸ்திரத்தை ஒரு பிளாஸ்ட்டிக் ட்ரம்மில் வடிகட்டி கொள்ளவும். 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி அக்னி அஸ்திரம் சேர்த்து கலந்து செடிகளுக்கு தெளித்தால் தண்டு துளைப்பான் பூச்சி, காய்ப்புழுக்கள் அனைத்தும் அழிந்து செடி ஆரோக்கியமாக இருக்கும்.