Kerala Recipe: கமகம இஞ்சி தொக்கு – சுவையாக செய்வது எப்படி?

0
97
#image_title

Kerala Recipe: கமகம இஞ்சி தொக்கு – சுவையாக செய்வது எப்படி?

செரிமானத்திற்கு உகந்த இஞ்சியில் சுவையான தொக்கு செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி – ஒரு துண்டு(பெரியது)
2)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
3)கடுகு – 1 தேக்கரண்டி
4)வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
5)மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
6)மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
7)புளி – ஒரு எலுமிச்சம் பழ அளவு
8)வர மிளகாய் – 5 (அ) 8
9) உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி தண்ணீரில் போட்டு சசுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைக்கவும்.

அதன் பின்னர் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சம் பழ அளவு புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி சில நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.அதேபோல் ஒரு கிண்ணத்தில் வரமிளகாய் போட்டு தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிய விடவும்.

பின்னர் அரைத்த இஞ்சி பேஸ்டை போட்டு மிதமான தீயில் வதக்கவும்.பிறகு ஊறவைத்த மிளகாயை அரைத்து இஞ்சியில் சேர்த்து வதக்கி எடுக்கவும்.

அதன் பின்னர் தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் மற்றும் புளி கரைசலை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.இஞ்சி கலவை எண்ணையில் இருந்து பிரிந்து நன்கு சுண்டி வந்ததும் வாணலியை இறக்கினால் சுவையான இஞ்சி தொக்கு தயார்.