Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் தக்காளி ஒழிச்சுக்கறி – சுவையாக செய்வது எப்படி?

0
319
#image_title

Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் தக்காளி ஒழிச்சுக்கறி – சுவையாக செய்வது எப்படி?

தக்காளி பழத்தை கொண்டு சுவையான ஒழிச்சுக்கறி கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி – 4
2)தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி
3)கடுகு – 1/2 தேக்கரண்டி
4)சீரகம் – 1/2 தேக்கரண்டி
5)உப்பு – தேவையான அளவு
6)சின்ன வெங்காயம் – 10
7)வர மிளகாய் – 3
8)பச்சை மிளகாய் – 3
9)மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
10)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
11)கறிவேப்பிலை – 1 கொத்து
12)தேங்காய் பால் – 1/2 கப்

செய்முறை:-

முதலில் நான்கு தக்காளி பழத்தை கட் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.பிறகு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.இதனை தொடர்ந்து 1/4 கப் தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு கடுகு,சீரகம் சேர்த்து பொரிய விடவும்.

பின்னர் கறிவேப்பிலை,வர மிளகாய்,பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி எடுக்கவும்.

பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து ஒருமுறை வதக்கி எடுக்கவும்.பின்னர் அரைத்த தக்காளி பேஸ்டை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.

பிறகு அரைத்த தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடங்களுக்கு குறைவான தீயில் வேகவிட்டு இறக்கினால் சுவையான தக்காளி ஒழிச்சுக்கறி ரெடி.இந்த டிஸ் சப்பாத்தி,சூடான சாதத்திற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும்.

Previous articleபேங்க் ஆப் பரோடா வங்கியில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!! மாதம் ரூ.18,000 சம்பளம்!!
Next articleதெரிந்து கொள்ளுங்கள்: நீங்கள் ருசித்த கீரைகளும் தெரியாத அதன் பலன்களும்!!