தெரிந்து கொள்ளுங்கள்: நீங்கள் ருசித்த கீரைகளும் தெரியாத அதன் பலன்களும்!!

0
245
#image_title

தெரிந்து கொள்ளுங்கள்: நீங்கள் ருசித்த கீரைகளும் தெரியாத அதன் பலன்களும்!!

1)முருங்கை கீரை

இரும்பு சத்து அதிகமுள்ள முருங்கை கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவை சரியாகும்.

2)தும்பை கீரை

இந்த கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு முழுமையாக நீங்கும்.

3)முடக்கத்தான் கீரை

மூட்டு வலியை போக்குவதில் முடக்கத்தான் கீரையை விட சிறந்த மருந்து இருக்க முடியாது.உடல் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

4)புதினா

செரிமானக் கோளாறு,வாய் துர்நாற்றம் சரியாகும்.உடல் புத்துணர்ச்சி பெறும்.இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் நீங்கும்.

5)வெந்தயக் கீரை

உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக்கும்.

6)தூதுவளை

சளி,இருமல் இருப்பவர்கள் தூதுவளை கீரையில் ரசம் செய்து சாப்பிட்டு வரலாம்.

7)மணத்தக்காளி கீரை

வயிற்றுப்புண்,செரிமாணக் கோளாறை சரி செய்ய உதவுகிறது.

8)துத்திக்கீரை

மூலம்,வாய்ப்புண்,அல்சரை முழுமையாக குணமாக்க உதவுகிறது.

9)வல்லாரை

மூளையின் நரம்புகளை வலுப்படுகிறது.நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.

10)அகத்தி கீரை

குடல் புண்களை ஆற்ற உதவுகிறது.மலச்சிக்கலை முழுமையாக குணமாக்கச் செய்கிறது.

11)குப்பைக்கீரை

பசி உணர்வை அதிகரிக்க உதவுகிறது.உடலில் உள்ள வீக்கத்தை வத்த வைக்கிறது.

12)காசினி கீரை

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.