Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திக்கும் கோதுமை பாயாசம் – அனைவரும் விரும்பும் சுவையில் செய்வது எப்படி?

0
292
#image_title

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திக்கும் கோதுமை பாயாசம் – அனைவரும் விரும்பும் சுவையில் செய்வது எப்படி?

அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள தானியமான கோதுமையில் கேரளா ஸ்டைலில் சுவையான பாயாசம் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)கோதுமை(உடைத்தது) – 1/4 கப்
2)தேங்காய் பால் – 1/2 கப்
3)வெல்லம் – 1/4 கப்
4)நெய் – தேவையான அளவு
5)முந்திரி – 15
6)உலர் திராட்சை – 10
7)உப்பு – 1 சிட்டிகை அளவு
8)ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி

கோதுமை பாயாசம் செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ரவை போன்று உடைக்கப்பட்ட கோதுமையை போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று முறை கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு குக்கர் வைத்து சுத்தம் செய்த கோதுமையை போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.

பிறகு 1/4 கப் தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேவையான அளவு நெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் முந்திரி,திராட்சை சேர்த்து வறுத்து ஒரு தட்டில் போட்டுக் கொள்ளவும்.

பிறகு அதே வாணலியில் அரைத்த தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.அதன் பிறகு வேக வைத்த கோதுமை,இடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

பாயாசம் வேகும் பொழுது அதில் நெய்யில் வறுத்த முந்திரி,உலர் திராட்சை சேர்த்து கிளறவும்.பின்னர் அதில் சிட்டிகை அளவு உப்பு,வாசனைக்காக ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விட்டால் சுவையான கோதுமை பாயாசம் தயார்.

Previous articleநகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் அசத்திய நடிகர் ஆர்.எஸ். சிவாஜி
Next articleமுடி உதிர்தல் நிற்க இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வாருங்கள்!! நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்!!