நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் அசத்திய நடிகர் ஆர்.எஸ். சிவாஜி

0
1398
#image_title

நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் அசத்திய நடிகர் ஆர்.எஸ். சிவாஜி

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்த எம்.ஆர். சந்தானம் அவர்களின் மகன் தான் ஆர்.எஸ்.சிவாஜி. அவருடைய சகோதரர் சந்தான பாரதி இயக்குனர் மற்றும் நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான ’பன்னீர் புஷ்பங்கள்’ என்ற திரைப்படத்தில் நடிகர் ஆர்.எஸ். சிவாஜி அறிமுகமானார். அதன் பிறகு வெளியான பல திரைப்படங்களில் இவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இவர் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. குறிப்பாக ’பம்மல் கே சம்பந்தம்’ ’அபூர்வ சகோதரர்கள்’ , ‘அன்பே சிவம்’, ’உன்னை போல் ஒருவன்’, உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு குறிப்பிடும் வகையில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

images 77

ஆர்.எஸ்.சிவாஜி, நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஜனகராஜூடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இதில் தெய்வமே நீங்க எங்கேயே போய்ட்டீங்க என்று இவர் சொல்லும் டைலாக் இன்னும் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

images 80

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடித்த திரைப்படங்களில் மட்டுமல்லாமல், மற்ற முன்னணி நடிகர்களான பிரபு, சத்யராஜ் உள்ளிட்டவர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்குப் முன் நெல்சன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான ‘கோலமாவு கோகிலா’ படத்தில் அவருடைய தந்தையாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

சாய் பல்லவியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்கி படத்தில் முக்கிய கேரக்டரில் இவர் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததன் மூலமாக பல்வேறு தரப்புகளிடமிருந்து பாராட்டுக்களை பெற்றார். இந்த படத்திற்கு பின்னர் இவர் வட்டகரா என்ற படத்தில் நடித்தார், மேலும் இவர் உதவி இயக்குனர் சவுண்ட் டிசைனர், லைன் தயாரிப்பாளர் என பன்முற திறமை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.