Kerala Recipe: கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு!! இதை சுவையாக செய்வது எப்படி?

Photo of author

By Divya

Kerala Recipe: கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு!! இதை சுவையாக செய்வது எப்படி?

Divya

Updated on:

Kerala Recipe: கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு!! இதை சுவையாக செய்வது எப்படி?

பெரும்பாலான மக்களுக்கு தக்காளி வைத்து செய்யப்படும் உணவுகள் என்றால் விருப்பமான ஒன்றாக இருக்கிறது.அதில் ஒன்றான தக்காளி குழம்பு கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி – 5 (நறுக்கியது)
2)பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
3)துருவிய தேங்காய் – 1/2 கப்
4)பச்சை மிளகாய் – 2
5)மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
6)மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
7)தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்
8)கடுகு – 1 ஸ்பூன்
9)கறிவேப்பிலை – 1 கொத்து
10)உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு கடாய் வைத்து 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் கடுகு,கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி எடுக்கவும்.

பின்னர் நறுக்கிய தக்காளி பழத்தை போட்டு நன்கு வதக்கி எடுக்கவும்.தக்காளி நன்கு வெந்து வந்ததும் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

தக்காளி வெந்து கொண்டிருக்கும் பொழுது அதில் துருவிய தேங்காய்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கிளறி 10 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால் சூடான சுவையான தக்காளி குழம்பு தயார்.