என்ன செய்தாலும் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகவில்லையா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!

0
155
#image_title

என்ன செய்தாலும் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகவில்லையா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்னவென்றால் அது மலச்சிக்கல் பிரச்சினைதான். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்க பல்வேறு மருந்துகள் வந்து விட்டது. இருப்பினும் இயற்கையாக வீட்டில் இருக்கக் கூடிய பொருட்கள் வைத்து தயாரிக்கும் மருந்தே உடல்நலத்திற்கு நல்லது.

ஆங்கில மருந்துகள் எல்லாம் எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகுமோ இல்லையோ வயிற்றில் மேலும் ஒரு நோய் தொற்றிக் கொள்ளும். எனவே மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்க இயற்கையான மருந்தை தயார் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

* சியா விதைகள்
* எலுமிச்சை சாறு
* தேன்

செய்முறை

முதலில் ஒரு கப் அளவுக்கு சியா விதைகளை எடுத்துக் கொண்டு அதை 15 நிமிடங்களுக்கு ஒரு பாத்திரத்தில் போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் இதில் இறுதியாக தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் இதை அப்படியே குடிக்கலாம். இதை தினமும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.