கேரளா ஸ்பெஷல் மொருமொரு சுக்கப்பம்!! இதை சுவையாக செய்வது எப்படி?

0
157
#image_title

கேரளா ஸ்பெஷல் மொருமொரு சுக்கப்பம்!! இதை சுவையாக செய்வது எப்படி?

அரிசி மாவு,தேங்காய் பால் வைத்து செய்யப்படும் சுக்கப்பம் கேரளாவில் பேமஸான உணவு பண்டம் ஆகும்.

தேவையான பொருட்கள்:-

1)அரிசி மாவு – 2 கப்
2)சின்ன வெங்காயம் – 8 (தோல் நீக்கியது)
3)தேங்காய் துருவல் – 1 கப்
4)வர மிளகாய் – 5
5)பச்சை மிளகாய் – 5
6)இஞ்சி – 1 துண்டு
7)பூண்டு – 5 பற்கள்
8)கறிவேப்பிலை – 2 கொத்து
9)ஏலக்காய் – 4
10) கிராம்பு – 3
11)மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
12)மிளகு தூள் – 1 தேக்கரண்டி
13)சோம்பு – 1/4 தேக்கரண்டி
14)முட்டை – 1
15)தேங்காய் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
16)உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.இந்த தேங்காய் பாலை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.

அதன் பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் அரிசி மாவு,எண்ணையை தவிர்த்து மற்றதை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள அரிசி மாவு மற்றும் தேங்காய் பாலை ஊற்றி கலந்து கொள்ளவும்.பிறகு அரைத்த மசாலா விழுதை சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் ஒரு முட்டையை உடைத்து அதில் ஊற்றி கலந்து கொள்ளவும்.மாவை நன்கு பிசைந்து 15 நிமிடங்கள் ஊறவிடவும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் தயாரித்து வைத்துள்ள மாவை தங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

இவ்வாறு செய்தால் சுக்கப்பம் மிகவும் சுவையாகவும் மொருமொருபாகவும் இருக்கும்.

Previous articleவெயில் காலத்தில் உடலில் வீசும் வியர்வை துர்நாற்றத்தை இப்படி கூட கட்டுப்படுத்தலாம்!!
Next articleபங்குனி வெயிலில் முகம் பளபளன்னு இருக்க இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க பெண்களே!!