வெயில் காலத்தில் உடலில் வீசும் வியர்வை துர்நாற்றத்தை இப்படி கூட கட்டுப்படுத்தலாம்!!

0
89
#image_title

வெயில் காலத்தில் உடலில் வீசும் வியர்வை துர்நாற்றத்தை இப்படி கூட கட்டுப்படுத்தலாம்!!

பெரும்பாலானோருக்கு உடலில் அதிக அளவு வியர்வை வெளியேறி துர்நற்றம் வீசும்.இதை கட்டுப்படுத்த வாசனை திரவியங்களை பயன்படுத்துவது,ஒரு நாளைக்கு 2 முறை குளிப்பது என்று எதை செய்தாலும் துர்நற்றம் கட்டுப்படாது.

உடலில் வீசும் கெட்டை வாடைக்கு நிரந்தர தீர்வு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1)வேப்பிலை
2)மஞ்சள்

ஒரு கப் வேப்பிலை மற்றும் ஒரு துண்டு மஞ்சள் கிழங்கை வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இவ்வாறு செய்தால் குளியல் பொடி ரெடி.

இதை ஒரு டப்பாவில் கொட்டி வைத்து குளிக்கும் பொழுது சோப்பிற்கு பதில் இதை பூசி குளிக்கவும்.இவ்வாறு செய்து வந்தால் உடலில் உள்ள கிருமிகள் அளிக்கப்பட்டு வியர்வை நாற்றம் கட்டுப்படும்.

1)மலை நெல்லிக்காய்

ஒரு கப் மலை நெல்லிக்காயை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு வெயிலில் வற்றல் போல் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.இந்த வற்றலில் ஒரு துண்டை ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் வியர்வை துர்நாற்றம் கட்டுப்படும்.