கேரளா ஸ்பெஷல் “மாட்டா அரிசி கஞ்சி” – செய்வது எப்படி?
கேரளா மட்டா அரிசியில் சுவையான… சத்தான கஞ்சி தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)மட்டா அரிசி – 1 கிளாஸ்
2)பச்சைப்பயறு – 1/4 கிளாஸ்
3)சீரகம் – 1 1/2 ஸ்பூன்
4)நெய் – 2 1/2 தேக்கரண்டி
5)உப்பு – தேவையான அளவு
6)துருவிய தேங்காய் – 1/2 கப்
7)காய்ந்த மிளகாய் – 2
மாட்டா அரிசி கஞ்சி செய்யும் முறை….
ஒரு கிண்ணத்தில் 1 கிளாஸ் மட்டா அரிசி, 1/4 கிளாஸ் பச்சைப்பயறு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று முதல் 4 முறை அலசிக் கொள்ளவும்.
பிறகு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரத்திற்கு ஊற விடவும். அரிசி, பச்சைப்பயறு நன்கு ஊறி வந்த பின்னர் அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அரிசி + பச்சைப்பயறை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
பிறகு துருவிய தேங்காய், காய்ந்த மிளகாய், சீரகம், நெய் சேர்த்து மூடிவிடவும். 4 முதல் 5 விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.
விசில் நின்றதும் குக்கரை திறந்து அரிசி கலவையை நன்கு கலந்து விடவும். பிறகு மீண்டும் அடுப்பை பற்ற வைத்து அரிசி கஞ்சியில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். இந்த கஞ்சியை அடிக்கடி செய்து குடித்து வந்தால் உடல் வலிமைபெறும்