மாணவர்களுக்கு ஸ்வீட் நியூஸ்: ரூ.5,00,000/- வரை கல்விக்கடன்..! முழு விவரம் இதோ!

0
157
#image_title

மாணவர்களுக்கு ஸ்வீட் நியூஸ்: ரூ.5,00,000/- வரை கல்விக்கடன்..! முழு விவரம் இதோ!

எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவருக்கும் கல்வி அறிவு இருக்க வேண்டும். நம்மிடம் உள்ள பணம்.. சொத்து.. நகையை பிறர் அபகரிக்கலாம். ஆனால் கல்வி அறிவை மட்டும் நம்மிடம் இருந்து யாராலும் அபகரிக்க முடியாது.

இதனால் தான் கல்வி கற்று தரும் ஆசிரியர்களை குரு.. ஆசான் என்று அழைக்கின்றோம். உலகம் முழுவதும் கல்விக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

நாளுக்கு நாள் டெக்னலாஜியில் உலகம் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. எதிர்கால இந்தியாவின் வளர்ச்சி படித்த இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதால்… நம் நாட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை, கல்விக்கடன் உள்ளிட்ட பல உதவிகளை மத்திய மற்றும் மாநில அரசு வழங்கி வருகிறது.

இதில் கல்விக்கடன் படிப்பிற்கேற்ப ரூ.1,00,000 முதல் ரூ.5,00,000 வரை மத்திய மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகள், அரசு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் இந்த கடனிற்கு வட்டியுடன் அசலை திருப்பி செலுத்த வேண்டும். வட்டி விகிதம் அந்தந்த வங்கிகளுக்கு ஏற்றவாறு மாறுபடும்.

கல்விக்கடன் பெறுவதற்கான தகுதி….

1)கல்விக்கடனுக்கு விண்ணப்பம் செய்ய இருப்பவர் இந்திய குடிமனாக இருத்தல் வேண்டும்.

2)மத்திய மற்றும் மாநில அரசால் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ கல்லூரியில் கல்வி பயில்பவராக இருக்க வேண்டும்.

3)கல்வி கடனுக்கு 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

4)கல்விக்கடன் பெற உள்ள விண்ணப்பதாரருடன் இணை விண்ணப்பதாரர் சேர்க்கப்பட வேண்டும்.

5)எந்த வங்கியில் கல்விக்கடனுக்கு விண்ணப்பம் செய்ய இருக்கிறீர்களோ அந்த வங்கியில் கணக்கு தொடங்கி இருக்க வேண்டும். ஆதார், பான் கார்டு, கல்லூரி படிப்பிற்கு ஆகும் ஆண்டு செலவு குறித்த விவரம், வோட்டர் ஐடி, மதிப்பெண் விவரம் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்கள் வைத்திருக்க வேண்டும்.

ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தாங்கள் தேர்வு செய்துள்ள படிப்பிற்கு உரிய கல்விக்கடன் தங்களது வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டு விடும்.

கல்விக்கடன் செலுத்த அவகாசம் – கல்லூரி படிப்பை முடித்து அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வாங்கிய கல்விக்கடனுடன் வட்டியையும் சேர்த்து செலுத்திவிட வேண்டும். கல்லூரி படிப்பு முடித்த அடுத்த 6 மாதத்திற்கு கல்விக்கடன் செலுத்த அவகாசம் வழங்கப்படும்.

பிறகு தாங்கள் வாங்கிய கல்விக்கடனிற்கு வட்டி மற்றும் அசல் தொகை என்று ஒரே தவணையாகவும் செலுத்தலாம்… இயலாதவர்கள் மாதம் மாதம் செலுத்தி வரலாம்.