கேரளா ஸ்டைல் பழம் பஜ்ஜி – செய்வது எப்படி?

0
151
#image_title

கேரளா ஸ்டைல் பழம் பஜ்ஜி – செய்வது எப்படி?

கேரளா மக்கள் அதிகம் விரும்பும் எண்ணெய் பண்டங்களில் ஒன்று நேத்திரம் பழம் பஜ்ஜி. இவை இனிப்பு பண்டமாகும். இந்த நேத்திரம் பழம் பஜ்ஜி சுவையாக செய்யும் முறை கீழேகொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*மைதா மாவு – ஒரு கப்

*சீனி – ஒரு கப்

*சீரகம் – சிறிதளவு

*நேந்திரம் பழம் – 1

*எண்ணெய் – தேவையான அளவு

*உப்பு – சிறிதளவு

செய்முறை:-

முதலில் கனியாத நேந்திரம் பழத்தை எடுத்து அதன் தோலை நீக்கி தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் ஒரு கப் மைதா மாவு சலித்து வைத்துக் கொள்ளவும். அடுத்து சிறிதளவு உப்பு மற்றும் சீரகம் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கி கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

எண்ணெய் சூடேறியதும் நீள வாக்களில் நறுக்கி வைத்துள்ள நேந்திரம் பழத்தை தயார் செய்து வைத்துள்ள பஜ்ஜி கலவையில் தடவி சூடேறிக் கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். இவ்வாறு செய்தால் நேந்திரம் பழம் பஜ்ஜி சுவையாக இருக்கும்.

Previous articleஉலக தரம் வாய்ந்த வானிலை ஆய்வு மையம் அமைய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் பேச்சு!
Next articleஉங்களுக்கு பயன்படக் கூடிய 10 பாட்டி வைத்திய குறிப்புகள்!!