உலக தரம் வாய்ந்த வானிலை ஆய்வு மையம் அமைய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் பேச்சு!

0
156
#image_title

உலக தரம் வாய்ந்த வானிலை ஆய்வு மையம் அமைய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் பேச்சு!

குமரிக்கடல் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பேய் மழை பெய்தது. தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சின்னா பின்னமான இந்த மாவட்டங்களில் மீட்டுப்பணி இன்றுவரை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெள்ள பாதிப்பை சந்தித்த தூத்துக்குடி மாவட்டத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மக்களுக்கும் உரிய நிவாரண தொகையை விரைவில் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மழைவெள்ளத்தால் இடிந்து, சேதமான வீடுகளை அகற்றி விட்டு மக்களுக்கு, அரசு உடனடியாக வீடு கட்டி தரவ வேண்டும். சென்னை வானிலை ஆய்வு மையம் குறித்த விமர்சனத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வானிலை ஆய்வு மையம் தற்பொழுது நவீனப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

வானிலை ஆய்வு மையத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்று தான் அவ்வாறு கூறவில்லை.
வெளிநாடுகளில் துல்லியமாக வானிலை நிலவரம் தெரிவிக்கப்படுகிறது. எங்கு எப்பொழுது எத்தனை செ.மீ. மழை பெய்யும் என்று சொல்லப்படுகிறது. நம் நாட்டின் வானிலை ஆய்வு மையம், இந்த மாவட்டத்தில் இந்த இடத்தில் மழை பெய்யும், இங்கு கன மழை பெய்யும், லேசான மழை பெய்யும் என்று மட்டும் தான் சொல்கிறது. நம்முடைய வானிலை அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஆனால் நம் நாட்டில் ஏன் அந்த தொழில்நுட்பத்தை கொண்டு வரமுடியவில்லை என்று தான் கேட்கிறேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பி பேசினார்.