கேரளா ஸ்டைல் “மாங்காய் பச்சடி” – சுவையாக செய்வது எப்படி?

0
100
#image_title

கேரளா ஸ்டைல் “மாங்காய் பச்சடி” – சுவையாக செய்வது எப்படி?

பொதுவாக மாங்காய் வைத்து சமைக்கப்படும் உணவு தனி சுவையுடன் இருக்கும். இந்த மாங்காயை வைத்து பச்சடி அதுவும் கேரளா ஸ்டைலில் செய்தால் அதிக சுவை மற்றும் மணமுடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*பச்சை மாங்காய் – 1 (சிறு துண்டாக நறுக்கியது)

*தயிர் – 300 கிராம்

*கடுகு – 1/4 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 1 கொத்து

*தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

*வெந்தயத் தூள் – 12 சிட்டிகை அளவு

*பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:- 

கேரளா ஸ்டைல் மாங்காய் பச்சடி செய்வது எப்படி?

ஒரு பச்சை மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். அவை சூடேறியதும் கடுகு 1/4 தேக்கரண்டி மற்றும் 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

பிறகு சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்த்து கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்து 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள். 1 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும். பின்னர் 2 சிட்டிகை அளவு வெந்தயத் தூள் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள மாங்காய் துண்டுகளை சேர்த்து கிளறி விடவும். தொடர்ந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி மீண்டும் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து மாங்காய் துண்டுகளை வதக்கி கொள்ளவும். மாங்காய் துண்டுகள் வதங்கி வந்ததும் 300 கிராம் அளவு தயிர் ஊற்றி ஒரு கிளறு கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் நன்கு கிண்டி விட்டால் சூடான சுவையான மாங்காய் பச்சடி தயார். இந்த ரெசிபி கேரளா மக்களின் பேவரைட் வகைகளில் ஒன்றாகும்.

Previous articleதாமதமாக சென்ற இரயில்! பயணி தொடர்ந்த வழக்கில் 60000 ரூபாய் இழப்பீடு வழங்கிய இரயில்வே!!
Next articleவீட்டில் பண வரவு அதிகரிக்க இதை உடனே செய்யுங்கள்!! 100% பலன் கொடுக்கும்! அனுபவ உண்மை!