கேரளா ஸ்டைல் புட்: “காலன்” – அதிக மணம் மற்றும் சுவையுடன் செய்வது எப்படி?

0
95
#image_title

கேரளா ஸ்டைல் புட்: “காலன்” – அதிக மணம் மற்றும் சுவையுடன் செய்வது எப்படி?

சேனைக்கிழங்கு மற்றும் பரங்கிக்காயை மூலப்பொருளாக வைத்து சமைக்கப்டும் உணவு காலன். இந்த ரெசிபி சூடான சாதத்திற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*சேனைக்கிழங்கு – 1/2 கப்

*பரங்கிக்காய் – 1/2 கப்

*தேங்காய் துருவல் – 1/4 கப்

*பச்சை மிளகாய் – 3

*வர மிளகாய் – 2

*சீரகம் – 1 தேக்கரண்டி

*மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*மோர் – 1 கப்

*உப்பு – தேவையான அளவு

தாளிக்க:-

*தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி

*கடுகு – 1/4 தேக்கரண்டி

*சீரகம் – 1/4 தேக்கரண்டி

*வெந்தயம் – சிறிதளவு

காலன் ரெசிபி செய்யும் முறை…

முதலில் சேனை கிழங்கு மற்றும் பரங்கிக்காய் இரண்டையும் எடுத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து நறுக்கி வைத்துள்ள சேனை கிழங்கு மற்றும் பரங்கிக்காய் சேர்த்து கொள்ளவும். பின்னர் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலந்து விடவும். பிறகு காய் வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் 1/4 கப் தேங்காய் துருவல், 3 பச்சை மிளகாய், 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

இந்த விழுதை கொதிக்கும் காய்கறி கலவையில் சேர்த்து கிளறி விடவும். அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பச்சை வாசனை நீங்கும் வரை வேக விட்டு குழம்பை இறக்கவும்.

அடுத்து அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் 1/4 தேக்கரண்டி கடுகு, சிறிதளவு சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து பொரிய விடவும்.

பிறகு கருவேப்பிலை மற்றும் மிளகாய் வற்றலை சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும். இந்த தாளிப்பு கலவையை தயார் செய்து வைத்துள்ள குழம்பில் சேர்த்து கலந்து விடவும். இவ்வாறு செய்தால் கேரளத்து காலன் ரெசிபி அதிக மணம் மற்றும் சுவையுடன் இருக்கும்.

Previous articleகூந்தல் நீளம் இடுப்புக்கு கீழ் இருக்க ஆசையா? அப்போ செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்கள்!!
Next articleசனி பகவான் பிடியில் இருப்பவர்களுக்கு நல்லது அதிகம் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! விரல் விட்டு எண்ணும் நாட்களில் பலன் கிடைக்கும்!!